a

இந்தியாவில் பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா! – எந்தளவிற்கு ஆபத்து?


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.16 லட்சமாக உள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.59 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணமாக மும்முறை மரபணு மாறிய கொரோனா காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தீவிரமாக பரவும் கொரோனாவுக்கு மக்களின் அலட்சியம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும் இந்த மும்முறை மரபணு மாறிய கொரோனாவின் வீரியம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Also Read  5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா தற்பொழுது 2ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,930,965 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 184,672 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,454,880 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு வைரஸ் தொற்று பரவ ஆரம்பிக்கும்போது பொதுவாக மாறக்கூடிய தன்மை வாய்ந்ததாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Also Read  கொரோனா தீவிரமாக இருக்கும் சமயம் அசைவ உணவுகளை சாப்பிடலாமா?

மேலும், இந்த மும்முறை மரபணு மாறிய கொரோனா என்பது மூன்று முறை மாற்றமடைந்த ஒரே வைரஸ் என கூறப்படுகிறது.

இந்த வைரஸ் எவ்வாறு இவ்வளவு தூரம் பரவுகிறது என்றும் இதன் ஆபத்துக்களை தெரிந்துகொள்வதற்கும் இன்னும் ஆய்வுகள் தேவைப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மும்முறை மரபணு மாறிய கொரோனா வேகமாக பரவி குழந்தைகளையும் தாக்குவது உறுதியாகியுள்ளது. எனவே, இது ஒரு கவலையளிக்கக்கூடிய சூழல்தான் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வாங்க மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

இந்த புதிய கொரோனா வகை தடுப்பூசியை இருந்து தப்புமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

ஆனால், இந்த வைரஸ் உடலில் இருக்கும் சில ஆன்டிபாடிகளில் இருந்து தப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா நோயாளிகளின் உடலில் உள்ள இயற்கையான ஆன்டிபாடிகளுக்கும் இவை காட்டுப்படுவதில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இடைத்தேர்தல் முடிவுகள்:

Tamil Mint

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint

“2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் – இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Devaraj

கொடூர குற்றங்களின் பாதிப்புகளைவிட மாசு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்: உ.பி. அரசை எச்சரித்த பசுமை தீர்ப்பாயம்!

Tamil Mint

ஜெகன்மோகன் ஹிந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார்: சந்திரபாபு நாயுடு

Tamil Mint

ராமர் கோயில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உ.பி. அரசு

Tamil Mint

புது வைரஸ், உஷார்! உஷார்!!

Tamil Mint

பிரபல தாதா சோட்டா ராஜன் மறைவு குறித்த செய்தியை மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்…!

Lekha Shree

அமித்ஷாவை காணவில்லை – டெல்லி போலீசில் புகார்

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்த முதியவர்

Devaraj

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint