70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் டார்க் வெப்பில் அம்பலம்.!


கிரெட் மற்றும் டெபிட் கார்டு வைத்துள்ள 70 லட்சம் இந்தியர்களின் வருமானம், தொலைபேசி எண்கள், பான் என்கள், வங்கி கணக்கு விபரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. 

ராஜ்சேகர் ராஜாரியா, ராஜஸ்தானைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர். இவர் டார்க் வெப்பில் கூகுள் டிரைவ் இணைப்பு ஒன்றை இந்த மாதம் கண்டுபிடித்துள்ளார். 

டார்க் வெப் என்பது சிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய இணையம் ஆகும். பயனர் யார், இணையதள ஆபரேட்டர் யார் என்பதெல்லாம் இதில் ரகசியமாக இருக்கும். பெரும்பாலான சைபர் குற்றங்களுக்கு இந்த டார்க் வெப் உதவுகிறது. 

இதில் ராஜ்சேகர் கண்டுபிடித்த இணைப்பில் 70 லட்சம் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்கள் தொலைபேசி எண்களுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read  ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

ஒரு நபரின் முழு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, நகரம், வருமான நிலை மற்றும் அட்டைதாரரின் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தரவுகள் 59 எக்செல் கோப்பு தொகுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த நபரின் பான் கார்டு எண், பணியாற்றும் நிறுவன விவரம், எந்த வகையான வங்கி கணக்கு போன்றவையும் அடங்கியுள்ளன என கூறினார். 

Also Read  பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? - கமல்ஹாசன்

“இதில் ஒரே அதிர்ஷ்டவசமான விஷயம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கு எண் விவரங்கள் இல்லை.  ஆனால் அட்டையை பயன்படுத்தி செலவழித்த தொகை பதிவாகியுள்ளது” என அவர் கூறியுள்ளார். 

சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘வை ஜங்கிள்’ நிறுவன சி.இ.ஓ., கர்மேஷ் குப்தா, “இத்தகவல் அனைத்தும் பெரு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களுடையது. அவர்களில் பெரும்பாலானோர் இணைய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு” என தெரிவித்தார். 

Also Read  பான் - ஆதார் கார்டை இணைக்க ஆண்டு வரை காலக்கெடு.!

இது பெரும்பாலும் 2010 முதல் 2019-ம் ஆண்டின் தொடக்கம் வரையிலான தகவல்கள். இதே போல் கடந்த ஆண்டு 13 லட்சம் பேரின் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் பிழை – கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.22 லட்சம் பரிசு…!

sathya suganthi

முடிவுக்கு வரும் ஊரடங்கு! எங்கு தெரியுமா?

Lekha Shree

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்த தந்தை; 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Tamil Mint

கொரோனா 2ம் அலை – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Lekha Shree

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

“பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!” – பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Lekha Shree

வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு

Tamil Mint

ஸ்வீட் கேட்டு என்று அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடக அரசு

Lekha Shree

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

நிலவில் இடம் கொடுத்த நிறுவனம்! – ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree