பெற்ற மகளை 8 மாதம் கர்ப்பிணியாக்கிய தந்தை கைது..!


சென்னையில் பெற்ற மகளை 8 மாதம் கர்ப்பிணியாக்கிய தந்தையை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சமையலராக பணியாற்றி வரும் ஏழுமலை என்பவர் தனது மனைவியை கடந்த ஜூன் மாதம் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 2 பெண்கள் இருக்கும் நிலையில் தன் இளைய மகளை தாயார் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

Also Read  தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்..!

மூத்த மகள் 16 வயது சிறுமி தந்தையுடன் இருந்து கொண்டு +1 வகுப்பு படித்ததுடன் பள்ளிக்கு சென்று வந்து வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார். அப்போது தொடர்ந்து மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் ஏழுமலை. மேலும் இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமியும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அச்சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து மகளிர் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Also Read  "ஸ்டாலினை தேர்தலில் பாஜகவின் சாதாரண தொண்டரே தோற்கடிப்பார்!" - கராத்தே தியாகராஜன்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏழுமலையை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சொந்த ஊருக்கு செல்லும் பன்னீர், அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்பு

Tamil Mint

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்

Tamil Mint

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: அதிமுகவினர் வெளிநடப்பு… சாலையில் அமர்ந்து போராட்டம் ..!

Lekha Shree

எமனே வந்து எச்சரித்தாலாவது கேட்போமா?… கோவையில் நடுரோட்டில் அரங்கேறிய ருசிகர சம்பவம்…!

Tamil Mint

சசிகலா கிட்ட இருந்து என்னோட சொத்தை மீட்டு கொடுங்க: கோரிக்கை வைக்கும் கங்கை அமரன்.!

mani maran

தமிழக அரசின் இலவச தையல் மிஷின் பெற என்ன செய்ய வேண்டும்?

Lekha Shree

“அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்கள் அரிக்க முடியாது!” – ஜெயக்குமார் திட்டவட்டம்..!

Lekha Shree

முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம்

Tamil Mint

பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள்

Tamil Mint

கோவை: பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…! ஆசிரியர் கைது..!

Lekha Shree