திருச்சி: இறந்த தாயின் உடலை வைத்து 3 நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்…! ஏன் தெரியுமா?


திருச்சி, மணப்பாறை அருகே மூன்று நாட்களாக உயிரிழந்த தாயின் உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்ட மகள்கள் குறித்து கிராம மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம்பட்டியில் மேரி (75) என்பவரது உடலை வைத்து மூன்று நாட்களாக அவருடைய மகள்கள் இருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசாரை வீட்டிற்குள் வரவிடாமல் அங்கிருந்த மேரியின் மகள்கள் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் தடுத்துள்ளனர்.

பின்னர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர் உதவியுடன் போலீசார் அந்த பெண்கள் இருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

Also Read  ஜெயலலிதாவை அடுத்து உருவாகிறது எம்.ஜி.ஆரின் பயோபிக்?

அப்போது அங்கு எந்தவித அசைவும் இன்றி கண்கள் திறந்த நிலையில் முழுவதும் நீலம் பூத்து காய்ந்த நிலையில் மேரியின் உடல் படுக்கையில் இருந்துள்ளது.

ஆனால், தாய் இறந்துவிடவில்லை என கூறிய மகள்கள் இருவரும், அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல்..!

அதனைத்தொடர்ந்து போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து மேரியின் உடலை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது மூதாட்டி உயிருடன் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அதி ஏற்க மேரியின் மகள்கள் இருவரும் மறுத்ததால், போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்த செல்வதாக கூறி உடலை ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் மேரி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். அதனால், மேரியின் உடலை பிணவறைக்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேரியை இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர் என்றும் அனைத்து இடங்களிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியதாகவும் கூறியுள்ளது தெரியவந்தது.

ஆனால், அவரது மகளார் இருவரும் அதி ஏற்க மறுத்து தாயின் உடலை வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read  மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! - ஒரேநாளில் 468 பேர் பலி!

அவ்வாறு செய்தால் அவர் சுகமடைவார் என்ற நம்பிக்கையில் இரு மகள்களும் கடந்த 3 நாட்களாக மேரியின் உடலை வைத்து தனி அறையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தீவிரமடையும் கொரோனா – சென்னையில் ஒரே நாளில் 7,149 பேர் பாதிப்பு!

Lekha Shree

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

Tamil Mint

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

Tamil Mint

நலவாழ்வு முகாமுக்கு உற்சாகத்துடன் புறப்பட்ட கோவில் யானைகள்

Tamil Mint

தமிழகத்தில் பார்களை திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை

Tamil Mint

நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும்: வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

Devaraj

தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை… தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரம்..!

Lekha Shree

எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree