“என்னவா இருக்கும்?” – சிஎஸ்கே ஜெர்சியில் டேவிட் வார்னர்..! பதிவை சில நிமிடங்களில் டெலிட் செய்தது ஏன்?


ஐபிஎல் 14வது தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. அதில் சென்னையும் கொல்கத்தா அணியும் மோதின.

இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

இதனால், சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ் சென்னையின் வெற்றியை கொண்டாடியும் மும்பை அணியின் விசிறிகளை கலாய்த்து பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் டேவிட் வார்னர் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே டெலிட் செய்துள்ளார்.

Also Read  ஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்றது இளம் இந்திய அணி…! இலங்கை ஆறுதல் வெற்றி!

அதில், “யாருக்கு சப்போர்ட் பண்ணுவதென்று தெரியவில்லை. ஆனால், இந்த ரசிகரின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை” என பதிவிட்டு சிஎஸ்கே ஜெர்சியில் அவரும் அவரது மகளும் இருப்பது போன்ற ஜெர்சியை பதிவிட்டார்.

ஆனால், சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துவிட்டு, “பலர் முந்தைய பதிவு குறித்து வருத்தம் தெரிவித்ததால்… இதோ இது தான் அசல் புகைப்படம்” என பதிவிட்டு அவரும் அவரது மகளும் ஐதராபாத் ஜெர்சியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார்.

Also Read  இன்றளவும் பிரமிக்க வைக்கும் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் - 37 ஆண்டுகால நினைவை கொண்டாடும் ரசிகர்கள்

இது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் அவரது அணியிலேயே ஒதுக்கப்பட்டது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கேப்டன்சி பறிபோனது விழுங்குவதற்கு கடினமாக விஷயம் தான். இன்னும் என்னிடம் கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் விடைகள் கிடைக்காது என்பதையும் அறிவேன். ஆனால், நாம் இதை பின்னுக்கு தள்ளிமுன்னேறி செல்ல வேண்டியதுதான் “என்று குறிப்பிட்டு இருந்தார்.

Also Read  தனுஷ் போட்ட ஒரு ட்வீட்… கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்..! என்ன காரணம்?

வரும் மெகா ஏலத்தில் வார்னர் சன்ரைஸ் அணியில் தக்கவைக்கப்பட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். அதனால், வார்னர் புதிதாக வரும் இரண்டு ஆணிகளில் ஏதாவது ஒன்றை கேப்டனாக வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.

ஆனால், அவரோ “சன்ரைஸ் அணியிலேயே தொடர விரும்புகிறேன். ஆனால், அது உரிமையாளர்கள் கையில்தான் உள்ளது” என்று கூறி வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்பந்து வீரர் ரொனால்டோவால் தூக்கி எறியப்பட்ட ஆர்ம் பேண்ட் ஏலம்..!

Lekha Shree

கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்தை கலங்கடிக்கும் இந்திய அணி.!

suma lekha

ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா – டெல்லி அணி அபார வெற்றி!

Jaya Thilagan

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி – 432 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்..!

Lekha Shree

டி காக் அதிரடியால் வெற்றி பாதைக்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ்!

Jaya Thilagan

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் – ஹாக்கி போட்டியில் ஹாட்ரிக் அடித்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனை..!

Lekha Shree

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனைக்கு துணை முதல்வர் வாழ்த்து!

Lekha Shree

ஐபிஎல் தொடரை வைத்து சூதாட்டம்? – 27 பேர் கைது..!

Lekha Shree

இந்தியா- இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் அப்டேட் இதோ

suma lekha

ஐபிஎல் 2021: அசத்தல் வெற்றி பெற்றாலும் வெளியேறிய நடப்பு சாம்பியன்ஸ் மும்பை…!

Lekha Shree

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

Lekha Shree

ஐபிஎல்லில் விளையாடுவதை ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?

Tamil Mint