வில்வித்தை போட்டிக்கான உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை!


உலக வில்வித்தை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி. உலக கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.

அதன் கடைசி நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ரிகர்வ் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமாலிகா ஆகியோர் அடங்கிய அணி 5-1 ஒன்று என்ற செட் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

Also Read  டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு…!

பின்னர் கலப்புபிரிவில் தனது கணவர் அதானு தாஸுடன் பங்கேற்ற தீபிகா நெதர்லாந்து ஜோடியை 5-3 என்ற கணக்கில் வென்றார்.

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தனிநபர் பிரிவில் ரஷியாவின் எலினாவை 6-0 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்திய தீபிகா குமாரி 3வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Also Read  ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!

இதனால், உலக வில்வித்தை பெண்கள் தரவரிசையில் தீபிகா குமாரி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்த மாதம் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள தீபிகா குமாரி இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குட்டி நாடு.! அனுப்பினது ரெண்டே பேரு.! தங்க பதக்கத்தை சொல்லி அடிச்ச சிங்கப்பெண்

mani maran

பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

Lekha Shree

ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் ஸ்ரீசாந்த் இல்லை!

Tamil Mint

”சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் திறமைமிக்க இங்கிலாந்து வீரர்” ஜெஃப்ரி புகழாரம்!

Tamil Mint

விம்பிள்டன் போட்டியில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்…!

Lekha Shree

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

suma lekha

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

பிப்ரவரியில் மினி ஏலம்: ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடக்குமா?

Tamil Mint

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5வது நாள் ஆட்டம் தொடக்கம்..!

Lekha Shree

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ஜாம்பவான் மெக்ராத்தின் வளர்ப்பு பிரசித் கிருஷ்ணா…!

Lekha Shree

சச்சின்,லாரா நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே தரலாம்! கலாய்த்த யுவராஜ் சிங்..வைரல் வீடியோ இதோ

HariHara Suthan