விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு – விசாரணையை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!


சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், விசாரணையை நாளை மறுதினம் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சில தினங்களுக்கு முன், திரைத்துறையில் நடிகராக இருந்து வரும் மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாகவும் திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்

மேலும், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன் தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டார்.

Also Read  "என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை" - மு.க. அழகிரி

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும் காதில் அறைந்ததாகவும் இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் அம்மனுவில் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, உண்மை சம்பவங்கள் இப்படியிருக்க மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.

Also Read  அக்டோபர் 14 அன்று வெளியாகும் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் டீசர்..!

எனவே, திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி அது உண்மைக்கு புறம்பான செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்தார்.

நடிகர் மகாகாந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் நாளை ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் விஜய் சேதுபதிக்கு அவரது மேலாளருக்கும் சம்மன் அனுப்பி இருந்தது.

Also Read  பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், விசாரணையை நாளை மறுதினம் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெ.வுக்கு பின் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தந்த ஸ்பெஷல் உபசரிப்பு…!

sathya suganthi

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

வைரமுத்து-சின்மயி விவகாரம் – மனம் திறந்த மதன் கார்க்கி..!

Lekha Shree

மீண்டும் சட்டமன்றத்துக்குள் அடி வைக்குமா கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகள்…!

Lekha Shree

சீதையாக நடிக்க கரீனா கபூர் எவ்வளவு கேட்டார் தெரியுமா?

Shanmugapriya

தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வேண்டுமா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க..!

suma lekha

தமிழகம்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Lekha Shree

சிறையில் சசிக்கு சிறப்பு வசதி.. கண்காணிப்பாளர் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் ஒழிப்பு படையினர்..!

suma lekha

சென்னையில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை

Tamil Mint

சர்ச்சையில் சிக்கியுள்ள சசிகுமாரின் ‘அயோத்தி’…!

Lekha Shree

நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒன்றிணைந்த 80’s திரையுலகம்: வைரலாகும் புகைப்படங்கள்.!

mani maran

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree