a

அமைச்சரவைக்குள் பூசல்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம்: பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்


புதுக்கோட்டையில் மறைந்த சமூக ஆர்வலர் அருள்மொழியின் பிறந்தநாளை யொட்டி ரூ.1.5 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோருக்கு பங்கேற்றனர்.

பின்னர், மழையூரில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவுக்கு அமைச்சர் ரகுபதியும், திருக்கட்டளை பகுதியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் சென்றிருந்தனர்.

அதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 60 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் இரு அமைச்சர்களும் கலந்து கொள்வதாக இருந்தது.

Also Read  இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

மழையூர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அமைச்சர் ரகுபதி மருத்துவக்கல்லூரிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

அங்கு அவர் சுமார் அரை மணி நேரமாக காத்திருந்தும் அமைச்சர் மெய்யநாதன் வரவில்லை. இதனால் பொறுமை இழந்த அமைச்சர் ரகுபதி, விழா மேடை ஏறி பேசத் தொடங்கினார்.

Also Read  விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தன்னால் யாருக்கும் தொந்தரவு வந்துவிடக்கூடாது, மக்கள் நலன்தான் முக்கியம் என்று நினைப்பவன் நான் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின்தான் தனக்கு தலைவர். அவர்தான் தனக்கு அமைச்சர் பதவி வழங்கி உள்ளார் என்றும் இந்த பதவி மூலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நல்ல பணிகளை செய்வேன் என்றும் பேசினார்.

பணிநியமன ஆணைகளை சுற்றுச்சூழல் அமைச்சர் வந்து வழங்குவார் என்று கூறிவிட்டு அங்கிருந்து அமைச்சர் ரகுபதி புறப்பட்டு விட்டார்.

அதன் பின்பு அங்கு வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Also Read  விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! - சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

இரு அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, ஒரு அமைச்சரின் தாமதத்தால் மற்றொரு அமைச்சர் வெளியேறிய நிகழ்வு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

அடுத்த ஆப்பு போக்குவரத்து துறைக்கா….! எச்சரிக்கும் போக்குவரத்து கழகம்…. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுமா…!

VIGNESH PERUMAL

அமமுக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்…!

Lekha Shree

27 மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் இடமாற்றம்…!

sathya suganthi

கொரோனா தடுப்பு பணியில் உயிர் நீர்த்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு:

Tamil Mint

விஜயகாந்துக்கு வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதி…! பிரேமலதாவுக்கு கைக்கொடுக்குமா…!

Devaraj

திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

Lekha Shree

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

Tamil Mint

முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…! ஆனந்த கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்…!

sathya suganthi