தலைநகர் டெல்லியில் மிகமோசமான காற்று மாசு நிலை..!


இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளதாக காற்று தர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பலரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் மிகப் பெரிய கவலையாக உருவெடுப்பது காற்று மாசு பிரச்சினை தன. தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் நிலவரப்படி காற்றுமாசு அளவு AQI 339 என்ற அளவில் அதிகரித்துள்ளது என காற்று தர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அளவு அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 341 ஆக பதிவாகியுள்ளது.

Also Read  ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

காற்று மாசு சராசரியாக 303 என்கிற அளவில் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று மாசானது 0-50க்கும் இடையில் இருந்தால் ‘நல்லது’, 51 மற்றும் 100க்கு இடையில் இருந்தால் ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200க்கு இடையில் இருந்தால் ‘மிதமானது’, 201 மற்றும் 300க்கும் இடையில் இருந்தால் ‘மோசம்’, 301 மற்றும் 400க்கும் இடையில் இருந்தால் ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401-500க்கு இடையில் இருந்தால் ‘கடுமையானது’ என கருதப்படுகிறது.

டெல்லி முழுவதும் தீபாவளி அன்று பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக பல இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read  நாகாலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதி உத்தரவு மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசான் வர்த்தக நிறுவனம் மூலம் கஞ்சா விற்பனை…! 5 பேர் கைது..!

Lekha Shree

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

Double Mask அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாமா…!

Devaraj

இரவில் மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்: காலையில் செல்போனை கானும் கண்டுப்பிடிச்சு கொடுங்கனு புகார்: வெளுத்து விட்ட போலீஸார்.!

mani maran

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree

கபடி விளையாடிய எம்.எல்.ஏ ரோஜா… உற்சாகத்தில் தொகுதி மக்கள்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா” – பிரதமர் மோடி

Lekha Shree

மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று…

Jaya Thilagan

திருமண பத்திரிக்கையே இவ்வளவு எடையா?? குஜராத்தில் நடந்த பிரம்மாண்ட திருமணம்!!!

Lekha Shree

“மகாத்மா காந்தி எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார்” : ராகுல் காந்தி எம்.பி. புகழாரம்.!

mani maran

இந்தியாவின் வெற்றி தொடருமா? இன்று ஸ்காட்லாந்து அணியுடன் மோதல்..!

Lekha Shree

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint