அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி!


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஓமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருவதுடன், அது தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிக்கும் என்பதும் மிரட்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Also Read  18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு

இந்தியாவில் 1,800க்கும் மேற்பட்டோர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் அதிக அளவாக 578 பேர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகின்றன. ஓமைக்ரான் 3வது அலை பரவலுக்கு வித்திட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  ஆண் தேவதை பட இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு…!

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் ட்விட்டரில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளுமாறும் தங்களை தனிமைபடுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பணம் சேர்த்து வைத்து பறவைகளுக்கு உணவு வழங்கும் சூரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்!

Shanmugapriya

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை

Tamil Mint

பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து: 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

suma lekha

அடுத்தடுத்து டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் – ஜம்முவில் பதற்றம்

sathya suganthi

மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!

Lekha Shree

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

“நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன்!” – புல்லி பாய் செயலியை உருவாக்கிய இளைஞர் நீரஜ்..!

Lekha Shree

குட்டி யானையை அலேக்காக தூக்கிச் சென்ற வனத்துறை ஊழியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

பெற்ற தாயின் உயிரை காக்க உதவிய 2 வயது பெண் குழந்தை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனா 2வது அலை எதிரொலி – மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

Lekha Shree