விராட் மகளுக்கு விடுக்கப்பட்ட பாலியல் மிரட்டல்..! டெல்லி பெண்கள் கமிஷன் போலீசாருக்கு நோட்டீஸ்..!


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றது தொடர்பாக கேப்டன் விராட் கோலி மகளுக்கு ஆன்லைன் மூலம் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக இன்று விசாரணையை துவக்கிய டெல்லி பெண்கள் கமிஷன், போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 24ஆம் தேதி நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதனை தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் இந்திய அணி கேப்டன் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார்.

Also Read  பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரவித்துள்ளார்

இது தொடர்பாக தகவல் அறிந்த டெல்லி பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை துவக்கியுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரம், கைது செய்யப்பட்ட விவரம் குறித்து வரும் 8 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

மேலும், இது தொடர்பாக டெல்லி பெண்கள் கமிஷன் தலைவர் சுவாதி மாலிவால் கூறுகையில், “ட்விட்டர் மூலம் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி போலீசாரிடம் தெரிவித்துள்ளோம்” என கூறினார்.

மேலும், விராட் கோலிக்கு ஆதரவாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “டியர் விராட், அவர்களுக்கு யாரும் எந்த அன்பும் செலுத்தாததால் அவர்கள் எல்லோரும் வெறுப்பால் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள். அணியை பாதுகாக்கவும்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

சபரிமலை கோயில் நடை திறப்பு…! இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி..!

Lekha Shree

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா…!

Lekha Shree

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் சர்ச்சை…! முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை

sathya suganthi

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

Lekha Shree

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

Lekha Shree

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அமித்ஷா, அதிரடிகளை உடனே ஆரம்பித்தார்

Tamil Mint

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடாவிடில் ஊதியம் இல்லை – அதிரடி உத்தரவுப் போட்ட ஆட்சியர்…!

sathya suganthi

கொரோனாவுக்கு குட் பாய் : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பண்ட் ..!

suma lekha