a

செவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு…! ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்…!


டெல்லியில் உள்ள ஜிப்மர் கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மிகவும் முக்கியமான மருத்துவமனையாகும். இங்கு கேரளாவிலிருந்து அதிகமான செவிலியர்கள் பணியாற்றுகின்றனர்.

அவர்கள் மலையாளம் தெரியாத சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது நிறைய சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.

Also Read  சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!

இதையடுத்து, செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சுற்றறிக்கை விட்டது.

அதில், பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மலையாளம் தெரியாத போது அந்த மொழியில் பேசுவது உதவியற்ற நிலையையும், சிரமங்களையும் ஏற்படுத்துகிறது என்றும் எனவே அனைத்து செவிலியர்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தை தான் தொடர்புக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Also Read  செவிலியர்கள் பாதங்களில் மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர் - அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!

இந்த சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை விட்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது அவ்வறிக்கையை வாபஸ் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read  மலையாளத்தில் சக்கப்போடு போட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

நாடு முழுவதும் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – மத்திய அரசு

sathya suganthi

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

Tamil Mint

வாட்ஸ் ஆப் மீது சட்ட நடவடிக்கை – மத்திய எச்சரிக்கை

sathya suganthi

தினமும் கோமியம் குடிக்கிறேன் – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

sathya suganthi

வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு…!

Lekha Shree

கழிவறைக்குள் சிறுத்தை மற்றும் நாயை ஒன்றாக பூட்டிய பெண்; நாய் உயிருடன் மீட்கப்பட்டதா?

Tamil Mint

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு

Tamil Mint

அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்…!

Devaraj