டெல்லி: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


இந்தியாவில் முதல்முறையாக டெல்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைத் தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையானது முற்றிலும் தானியங்கி முறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Also Read  இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் - துணை முதல்வர்

ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படுவதற்கு முந்தைய விதிகள் அனுமதி அளிக்காததால் மத்திய அரசு மெட்ரோ ரயில்வே பொது விதிகளில் மாற்றம் செய்து அறிக்கையாக வெளியிட்டது. முதல்கட்டமாக டெல்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை செயல்படும் எனவும் டெல்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் கமாண்ட் சென்டரில் இருந்து, ரயிலின் புறப்படும் நேரம், நிற்கும் நேரம், ரயிலின் வேகத்தை தீர்மானித்து இயக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தானியங்கி மெட்ரோ சேவைகள் கிழக்கு டெல்லியில் இருந்து மேற்கு டெல்லி வரை செல்லும் வழித்தடத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ அதிகாரிகள், 7ம் எண் வழித்தடத்தில் இந்த சேவை துவங்கப்படும் என்றும், இதன் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்காணித்த பிறகே மற்ற வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Also Read  டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

Tamil Mint

யூடியூப் சேனலை தொடங்கிய தேசியக் கட்சி…!

Devaraj

மோடிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு? – சொன்னவர் யார் தெரியுமா?

sathya suganthi

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

Lekha Shree

ஆட்கொல்லி கொரோனா…! ஒரே நாளில் 3498 பேரின் உயிரை பறித்த அவலம்…!

Devaraj

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

பணம் சேர்த்து வைத்து பறவைகளுக்கு உணவு வழங்கும் சூரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்!

Shanmugapriya

செந்தில் பாலாஜிக்கு செக்: கொதித்தெழுந்த திமுக சீனியர்ஸ்.!

mani maran

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint