a

சீரழியும் தலைநகர்… சிகிச்சை நிறுத்தம்! கண்கலங்க வைக்கும் டெல்லியின் நிலை!


கொரோனா நோய்த்தொற்றின் கொடூரப் பிடியில் சிக்கி இந்தியா சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. எந்த நாடுகளும் சந்திக்காத பேரழிவை இந்தியா சந்தித்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனமே வருத்தத்துடன் செல்லியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மரண பயத்தை உண்டாக்குகிறது. அதிலும் வட மாநிலங்களில் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிவது காண்போரை கண்கலங்க செய்கிறது.

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாத ஒரே காரணத்தால் உயிரிழந்துள்ளனர்.

பல மருத்துவமனைகளின் வாசல்களில் சிகிச்சைக்கு அனுமதி கேட்டு உறவினர்கள் அழும் சத்தம் கதிகலங்க வைக்கிறது. கடந்த ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத கொரோனா இந்த ஆண்டு தலைநகரை புரட்டிப்போட்டு வருகிறது.

Also Read  மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல்க்கு ஆப்பா?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என கையேந்தி நிற்கிறார். டெல்லியில் தினசரி 700 டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாநில அரசு விழி பிதுங்கி நிற்கிறது. மத்திய அரசு இப்படிபட்ட பேரழிவு ஏற்படும் என்பதை சுதாரிக்காமல் போனதே இந்த நிலைமைக்கு காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

Also Read  "இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்" - ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

மகாராஷ்டிராவை அடுத்து டெல்லியில் தான் உயிரிழப்புகள் அதிக அளவு நிகழ்ந்து வருகிறது. மின்மயானங்கள் அனைத்தும் பிணங்களால் நிரம்பி வழிகின்றன.

அங்கே இடம் கிடைக்காத பலர் விளையாட்டு மைதானங்களில் குவியல் குவியலாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை ஒன்றாக போட்டு எரிக்கும் காட்சிகள் மனதை ரணமாக்குகின்றன.

மூச்சுத்திணறி நிற்கும் டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இன்னும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு இருப்பதால் 600-க்கும் மேற்பட்ட ஐசியூ நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.

தடுப்பூசிக்காகவும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காகவும் பல ஆயிரம் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். மருத்துவமனை வாசல்களிலேயே பல நோயாளிகள் உயிரை விடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Also Read  கொரோனா காரணமாக இந்தியாவில் ரயில்கள் ரத்து செய்யப்படுமா? - ரயில்வே துறை விளக்கம்!

இந்த வீடியோக்கள் டெல்லியின் நிலையை மொத்தமாக விளக்கிவிடுகிறது. நிலைமை கைமீறியதன் காரணமாக இரவு பகலாக மயானங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2000 ஆயிரம் ரூபாய் நோட்டு RBI புதிய அறிவிப்பு!

Tamil Mint

அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

Tamil Mint

பாராளுமன்ற வளாகத்தில் தீ, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் தேவைகளை பெற ஆன்லைன் சேவைகள் அறிமுகம்!

Lekha Shree

மனைவியின் துயரைப்போக்க சொந்தமாக கிணறு தோண்டி அசத்திய மனிதர்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

2021 குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு?

Tamil Mint

“நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

Lekha Shree

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: டெல்லியில் 2 நாள் இரவு நேர ஊரடங்கு அமல்

Tamil Mint

பிரதமர் பாராட்டிய தமிழக சாதனையாளர்: யார் இந்த யோகநாதன்?

Devaraj