a

ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா – டெல்லி அணி அபார வெற்றி!


அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய கொல்கத்தா அணி 25 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. நிதிஷ் ராணா 15, திரிபாதி 19, கில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

Also Read  "குட்டி கில்லாடி கலரு கண்ணாடி" இணையத்தில் வைரலாகும் சுட்டிகுழந்தை சாம் கரணின் புகைப்படம்!

அடுத்துவந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேப்டன் இயான் மார்கன் சுனில் நரேன் ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். கொல்கத்தா அணி 109 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து கடுமையாக திணறியது.

பின்னர் களமிறங்கிய ரசல் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது.

Also Read  ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. – பிரித்வி ஷா – ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசி ஷிகர் தவான் வெளியேறினார்.

பிரித்வி ஷா வெறும் 41 பந்துகளில் 3 சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து எதிரணியை கடுமையாக சோதித்தார்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் - ஸ்ரேயாஸ் அய்யர் தொடரிலிருந்து விலகல், ஐபிஎல் இல் விளையாடுவது சந்தேகம்!

டெல்லி அணியின் ரன் மழையால் 16-வது ஓவரில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை வசப்படுத்தியது இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புது மாப்பிள்ளை பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! இது தான் காரணமா?

Devaraj

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

சிஎஸ்கே வின் மெர்சல் ஆட்டம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Jaya Thilagan

தோனியா – கோலியா : ஜெயிக்கப் போவது யார்?

Devaraj

ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!

Lekha Shree

சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

Jaya Thilagan

வெற்றி நடை போடும் சி.எஸ்.கே. – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Jaya Thilagan

இனி நான் தான் ஓப்பனர் – கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

Devaraj

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

Lekha Shree

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!

Jaya Thilagan

சென்னை – மும்பை இன்று பலப்பரிட்சை!

Lekha Shree