a

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!


கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

கொரோனாவால் உலகளவில் அதிகப்படியாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று இந்தியா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது இந்தியா.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Also Read  குறையாத கொரோனா பாதிப்பு - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

இன்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,59,170 ஆக உள்ளது. மேலும், 1,761 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Also Read  “மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” - கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

மொத்தம் அந்த விமானத்தில் 188 பேர் பயணித்துள்ளனர். சுமார் 25% பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரிட்டன் நாட்டின் சிவப்பு பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பதும் இந்தியாவிற்கு செல்லாதீர்கள் என அந்நாட்டு அரசு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read  போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை? – காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி

Tamil Mint

சச்சின் கவனமாக செயல்பட வேண்டும் – சரத் பவாரின் சூப்பர் அட்வைஸ் இதோ!

Tamil Mint

இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரம் காட்ட காரணம் என்ன…? விரிவான தகவல்கள்…!

Devaraj

அமோக வரவேற்பை பெற்றுவரும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!

Tamil Mint

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

Jaya Thilagan

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint

350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

Shanmugapriya

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint

2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

Shanmugapriya