தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!


தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

Also Read  வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

Also Read  கோவை: மதுபான ஐஸ்கிரீம் விற்பனை..! கடைக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

இன்று முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை கேரளக் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். அதனால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் தமிழன் – இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!

Lekha Shree

“அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு!” – சிம்புவின் ‘மாநாடு’ குறித்து சீமான்..!

Lekha Shree

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

Tamil Mint

லண்டனில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலுக்கு ஒப்படைப்பு

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Tamil Mint

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

ஒரே பெயரில் பல வாக்காளர்கள்…. முதுகுளத்தோர் தொகுதியில் சுவாரசியம்!

Lekha Shree

ஸ்டாலினை எதிர்க்கும், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற திருநங்கை…!

Lekha Shree

9,11ம் வகுப்புகளுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடக்கம்

Tamil Mint