அமெரிக்காவில் அச்சுறுத்தலாக மாறிய ‘டெல்டா’ வகை கொரோனா…! கவலையில் வெள்ளை மாளிகை…!


பிரிட்டனில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், 90 சதவீதம் பேர் டெல்டா வகை தொற்றினால் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதே போல் இந்தியாவிலும் டெல்டா வகையால், இரண்டாவது அலை பரவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவிலும் டெல்டா வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  கொரோனா தடுப்புப் பணியில் ரோபோ...!

இது குறித்து, வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆன்டனி பாஸி செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது, இந்தியாவில் முதன்முதலில் கண்டறிப்பட்ட டெல்டா வகை தொற்று, தற்போது அமெரிக்காவிலும் வேகமாக பரவ துவங்கி உள்ளது என்றார்.

Also Read  கொரோனா எதிரொலி - கருவுறுவதற்கு கட்டுப்பாடு…!

புதிதாக பாதிக்கப்படுபவர்களில், 20 சதவீதம் பேருக்கு இந்த வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு இந்த டெல்டா வகை வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை உருமாறிய வைரஸ் வகைகளிலேயே இந்த டெல்டா வகை அதிக வீரியம் உடையதாகவும், வேகமாக பரவும் தன்மையுடனும் உள்ளது என்றும் பாதிப்பு ஏற்படுபவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு தொற்று தீவிரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

அமெரிக்காவில், இரண்டே வாரத்தில் கொரோனா தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12 வயது சிறுவனால் நேர்ந்த கோர விபத்து – நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…!

Devaraj

உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!

Shanmugapriya

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் – அமெரிக்க ஆய்வில் தகவல்

sathya suganthi

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…!

Lekha Shree

“டேனிஷ் சித்திக் கொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” – தாலிபான்கள்

Lekha Shree

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

இளம் பெண்ணின் அறையில் இருந்த ஸ்பைடர் கூட்டம்! – இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

குட்டி நாடு.! அனுப்பினது ரெண்டே பேரு.! தங்க பதக்கத்தை சொல்லி அடிச்ச சிங்கப்பெண்

mani maran

இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Tamil Mint