செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் “டெல்டா”…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!


நாட்டில் கொரோனா 2வது அலை பரவ முக்கிய காரணமாக உருமாறிய டெல்டா வைரஸ் பார்க்கப்படுகிறது.

மிகவும் வேகமாக பரவக்கூடிய அந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகம் முழுக்க 85 நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கொரோனா அதிக கேஸ்களை ஏற்படுத்துவதால், அதிக பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளதென்றும் பலி எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் நினைத்ததை விட மோசமாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் முன்னாள் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் ராமன் கங்காகேத்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி…!

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிக பரவும் திறன் கொண்டதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கும் வேகமாக தாவும் திறன் கொண்டது என்றும் இதனால் உடலின் ஒரு உறுப்பை தாக்கிவிட்டு, வேகமாக இன்னொரு உறுப்பையும் தாக்கும் திறன் இதற்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து - விரைவில் அறிமுகம்

செல்கள் வழியாக மூளைக்கும் இது நேராக செல்லும் திறன் கொண்டது என்ற நிலையில், இதனால் மூளை தொடர்பான பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ராமன் கங்காகேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

உடலில் எந்த உறுப்பை வேண்டுமானாலும் இது தாக்கலாம் என்றும் பல்வேறு உறுப்புகளை இது தாக்கி பாதிப்படைய செய்ய வைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தினால் நரம்பு ரீதியான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

அசாமிலேயே இந்த குழந்தை தான் அதிக எடையுடன் பிறந்து உள்ளதாம்!

Shanmugapriya

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள் -அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்…!

sathya suganthi

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

முடிவுக்கு வரும் ஊரடங்கு! எங்கு தெரியுமா?

Lekha Shree

2021 குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு?

Tamil Mint

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

“பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!” – பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Lekha Shree

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் மிதக்கும் மும்பை…!

Lekha Shree

கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்!

Shanmugapriya