111 நாடுகளில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!


உலக சுகாதார அமைப்பு, “பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து அதிகமாக புதிய கொரோனா தொற்றுக்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளன” என தெரிவித்து உள்ளது.

மேலும், உலக அளவில் கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து இறப்பு சதவிகிதமும் 3% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அதன் வாராந்திர தொற்றுநோய் புள்ளி விவர பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், “உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள டெல்டா வைரஸ் பரவியுள்ளது.

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாறிய வைரஸ்களில் மிக விரைவாகப் பரவும் ஆற்றல் டெல்டாவுக்கு தான் உள்ளது.

Also Read  காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்

இதனால் வரும் நாட்களில் மேலும் பல நாடுகளில் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மிகக்குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நேரம் செலவிட நேரிடும். உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ்கண்டறியப்பட்டுள்ளது. பீட்டா, காமா வைரஸ்கள் முறையே 123 மற்றும் 75 நாடுகளில் பரவி உள்ளன.

Also Read  ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

பல நாடுகளில் தொற்று நோய் கண்காணிப்பு, பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளன. அதனால், எப்போது எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

தற்போது சர்வதேச போக்குவரத்து அதிகரித்துள்ளதால் நோய் தாக்கம் மற்றும் தீர்வுகளுக்கான செயல் திட்டங்களை வகுப்பது அவசியம்.

Also Read  அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

உலகில் 300 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 24.7 சதவீதம் தான்.

‘கோவாக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கான தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாலை வசதி இல்லை! – கர்ப்பிணி பெண்ணை பத்து கிலோமீட்டர் சுமந்து சென்ற கிராம மக்கள்!

Shanmugapriya

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

காதலர் தின பரிசாக கணவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கொடுத்த பெண்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்

Shanmugapriya

இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா 2வது அலை…!

sathya suganthi

சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு கோடாாியால் வெட்டு – பதைபதைக்க வைக்கும் காட்சி

Tamil Mint

2013-ம் ஆண்டிலேயே கொரோனாவை கணித்த நபர்.. வைரலாகும் ட்வீட்..

Ramya Tamil

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!

sathya suganthi

கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் ராணுவ முகாம்கள்…!

Devaraj

12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து தரைமட்டம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

sathya suganthi

வீட்டிலேயே கொரோனா சுய பரிசோதனை…! எப்படி செய்வது…!

sathya suganthi

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

ஆக்ரோஷமாக கொட்டிய நயாகரா சைலண்ட் மோடுக்கு மாறியதன் பின்னணி! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree