a

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!


தனுஷின் பொல்லாதவனில் அறிமுகமாகி, விஜயசேதுபதியின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் டேனியல் போப்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2வது சீசனில் பங்கேற்ற டேனியல் போப், சமூகவலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறி பேசியதாக டேனி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பகல் நேரங்களில் சாதரணமாக குறுந்தகவல்களை அனுப்பும் டேனி, இரவு நேரத்தில் சிறுமியின் போட்டோவை கேட்டு தொல்லை கொடுத்துள்ளதாகவும் சில நேரங்களில் வீடியோ காலில் பேச வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் டேனி சிறுமிக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், ஏராளமானோர் டேனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read  ட்ரெண்டாகும் 'தல 61' ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வழக்கறிஞர் வழியாக டேனியல் விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த 4 நாட்களாக தன் தரப்பு மீது தவறான வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்றும் சமுதாயத்தில் அவருக்குள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

டேனியல் பற்றி வெளியிடப்பட்டுள்ள மீம், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் சைபர் கிரைம் வழியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Also Read  மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் 'மாஸ்டர்'!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… தயாரிப்பாளரின் பதில்..!

Lekha Shree

கோடி கணக்கில் விலை போன வலிமை பட உரிமம்..! வலிமை அப்டேட் இதோ..

Jaya Thilagan

“கில்லி ஆதிவாசி” மாறன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

sathya suganthi

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

Cat Women போல போஸ் கொடுக்கும் ரைசா வில்சன்! இது வேற லெவல் போட்டோ!

HariHara Suthan

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan

தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

Shanmugapriya

சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

Lekha Shree

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL