தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?


நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலை 14ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தொடங்குகிறது.

இதற்காக ஜூலை 13ம் தேதி மேற்கு வங்கத்துக்கு பயணிக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் 169வது படத்தை யார் இயக்க உள்ளார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது.

Also Read  நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் 'கூல் கேப்டன்'... தோனியின் புதிய அவதாரம் இதோ!

தொடக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என செய்திகள் பரவின. ஆனால், தற்போது ‘தலைவர் 169’ படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டினார் ரஜினி.

Also Read  'விக்ரம்' பட அப்டேட் - கமலுக்கு வில்லனாகும் 4 நடிகர்கள்?

மேலும், ரஜினியின் தீவிர ரசிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிங்கு மற்றும் ரஜினி இணையும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்திகள் உந்மயாக இருக்கும் பட்சத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் ரஜினி படமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரான உடன் ரஜினியின் 169வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

HariHara Suthan

‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

Lekha Shree

Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

நடிகர் கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய்? வெளியான உண்மை தகவல்..!

Lekha Shree

மாஸ்டர் பவானியின் காரை இயக்கிய பவானி! வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

Lekha Shree

“இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” – ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

Lekha Shree

ரூ.1 லட்சம் அபராதம் – நடிகர் விஜய் மேல்முறையீடு..!

Lekha Shree

தனி விமானத்தில் கொச்சினுக்கு பறந்த விக்கி-நயன் ஜோடி! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

“தலைமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை” – அனைவரும் வாக்களிக்க நடிகர் விவேக் வேண்டுகோள்!

Shanmugapriya

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் – தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

Lekha Shree