சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளதாக ஆட்சியர் திவ்யா அறித்திருந்தார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மண்டல பூஜைகள் நடைபெறும்.

இந்த பூஜைகளில் கலந்துகொண்டு ஐயப்பன் தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Also Read  மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

அந்த வகையில் கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் கல்கி அணையிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Also Read  கழிவறை கூட இல்லாத அறை - காதலுக்காக 10 ஆண்டாக ஒளிந்திருந்த பெண்…!

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் மழை குறைந்ததை அடுத்து பம்பையில் தண்ணீர் சீராக செல்வதால் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார்.

Also Read  ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

இருப்பினும் பம்பை ஆற்றில் குளிக்க தடை தொடர்வதாகவும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

Lekha Shree

கலால் வரி குறைப்பு எதிரொலி – சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

Lekha Shree

கப்பல் பார்ட்டியில் ஷாருக்கான் மகன் : தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

suma lekha

பெட்ரோல் விலை சதத்தை கடந்த 8 மாநிலங்கள்…!

Lekha Shree

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

இன்றைய கொரோனா அப்டேட் – ஒரே நாளில் 4,092 பேர் பலி…!

sathya suganthi

அமிதாப்பச்சனுக்கு கொரோனா

Tamil Mint

இந்தியாவில் இதுவரை 7.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி? வாஷிங்டன் பல்கலை. அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

ரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!

Tamil Mint

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree