ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ‘மாறன்’ திரைப்படம்?


கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாறன்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதுவரை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால் திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி வருவதால் பல்வேறு படங்கள் தேதி கிடைக்காத காரணத்தால் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

Also Read  'கோ' படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

இதனிடையே மாறன் படத்தையும் ஓடிடியில் வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

மேலும், பொங்கல் வெளியீடாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட பெரும் தொகைக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read  "மற்ற படங்கள் குறித்த பதிவுகளை குறைக்க வேண்டும்!" - நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் கோரிக்கை..!

இதுதொடர்பாக படக்குழுவினர் மௌனம் காத்து வருகின்றனர். முன்னதாக தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் வெளியீடு என முடிவான போது அவர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மற்றொரு படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதால், இதுகுறித்து தனுஷ் என்ன சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also Read  பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், சிலர் ஒருவேளை பொங்கலுக்கு ‘மாறன்’ திரைப்படம் வெளியானால் அஜித்தின் ‘வலிமை’ படத்தோடு மோதும் என கூறி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

“இதை பரிசாக கொடுத்தால் போதும்” – ரசிகர்களிடம் நடிகர் கார்த்தி வேண்டுகோள்!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

மீண்டும் இணையும் ‘டாக்டர்’ வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree

“கொஞ்சம் நன்றியோடு இருங்க” – விஜய் சேதுபதி குறித்த இடும்பாவனம் கார்த்திக்கின் ட்வீட் வைரல்..!

Lekha Shree

‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் பிரபல மலையாள நடிகர்…!

Lekha Shree

‘Survivor’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

சர்ஜரிக்கு பின் எப்படி உள்ளார் அர்ச்சனா? – மகள் சாரா கூறிய தகவல்..!

Lekha Shree

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree