“தனுஷின் ‘மாறன்’ படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும்!” – ரசிகர்கள் ட்விட்டரில் வலியுறுத்தல்..!


இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன். மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Also Read  'பாரதி கண்ணம்மா' தொடரில் வெண்பா கதாபாத்திரத்திற்கு விரைவில் End Card..!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அப்படத்தின் மாபெரும் வெற்றியால் இன்று தனித்துவமான த்ரில்லர் படங்களை இயக்கும் இயக்குநர்களின் பட்டியலில் இணைத்துள்ளார் கார்த்திக் நரேன்.

இதனால், மாறன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

ஆனால், இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், “மாறன் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும்” என தனுஷின் ரசிகர்கள் ட்விட்டரில் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் வெளியானபோது அதில் தனுஷுக்கு அவ்வளவாக விருப்பமில்லாததை ட்வீட் மூலம் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதனால், மாறன் படம் நிச்சயமாக ஓடிடியில் வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு வெளியான தகவலால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Also Read  தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

இதன் காரணமாக “மாறன் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும்” என தனுஷின் ரசிகர்கள்ட்விட்டரில் வலியுறுத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! – வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்.. மருத்துவமனையில் அனுமதி..!

suma lekha

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி சந்திப்பு.!

suma lekha

திருமணம் செய்யலாமா என்று கேட்ட ரசிகருக்கு செம்ம பதில் கொடுத்த குஷ்பு.!

suma lekha

நேரடியாக டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா.!

suma lekha

டாட்டூ போடுவதற்கு வேறு இடமே இல்லையா? ரோஜா சீரியல் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

HariHara Suthan

துணை நடிகர் காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.!

mani maran

‘வலிமை’ பட வில்லனுக்கு விரைவில் டும் டும் டும்..!

suma lekha

தனுஷின் புதிய சாதனை! – கொண்டாடும் ரசிகர்கள்…!

Lekha Shree

இணையத்தை தெறிக்கவிடும் ‘வலிமை’ BTS புகைப்படங்கள்…!

Lekha Shree

குக் வித் கோமாளி இறுதி போட்டியில் என்ஜாயி என்ஜாமி! வெளியான வேறலெவல் புகைப்படம்..

Jaya Thilagan

இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

suma lekha