a

ரஜினி ரசிகர்கள் தன்னை திட்டக்கூடாது – வைரலாகும் தனுஷின் டுவிட்டர் ஸ்பேஸ் பேட்டி


டுவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ குழுவினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹாலிவுட் திரைப்படத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் போல் ’ஜகமே தந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை என்று கூறினார்.

முதலில் ஜகமே தந்திரம் படத்திற்கு ’சுருளி’ என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்திற்கு சரியான தலைப்பை தேர்வு செய்து ’ஜகமே தந்திரம்’ என்று மாற்றியதாகவும், அவருக்கு தனது நன்றி என்றும் தனுஷ் தெரிவித்தார்.

Also Read  மலேசியாவில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையிடப்படவில்லை... ஏமாற்றத்தில் கோலிவுட் ரசிகர்கள்!

’ஜகமே தந்திரம்’ படத்தில் ஆங்காங்கே ரஜினிகாந்த் சாயல் இருக்கும் என்றும் அதனால் ரஜினி ரசிகர்கள் தயவு செய்து திட்ட வேண்டாம் என்றும் நடிப்பை ரசியுங்கள் என்றும் தனுஷ் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஹாலிவுட்டில் தனக்கு 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என்றும் ஆனால் ரிகர்சல் காரணமாகத்தான் அதிக நாட்கள் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read  வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்....

ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை சரியானபடி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருப்பது சில சமயம் கஷ்டமாக உள்ளது என்றும் ஆனால் ரசிகர்கள் அன்பால் அது தெரியவில்லை என்றும் இன்னும் இருபது நாட்கள் தான் படப்பிடிப்பு அதன்பின் சென்னை வர இருப்பதாகவும் அம்மாவின் கையால் சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Also Read  வெளியானது ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

மேலும் இன்னும் சில ஆண்டுகளுக்கு திறமையான இயக்குனர்கள் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று கூறிய தனுஷ், மூன்று ஆண்டுகளுக்கு இயக்குனர் தனுசை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியில் ரீமேக்காகும் ‘துருவங்கள் பதினாறு’…! ரகுமான் கதாபாத்திரத்தில் இந்த இளம் ஹீரோவா?

Lekha Shree

பகத் பாசிலின் இருள் படத்தின் ட்ரைலர் வெளியீடு – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

ஜெயம் ரவியை நம்பி அந்தரத்தில் சிக்கி தவிக்கும் இயக்குனர்…..

VIGNESH PERUMAL

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘தேசிய விருது’ பெற்ற நடிகர்…!

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

கொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி? வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

“தயவு செய்து உதவுங்கள்” – விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

Lekha Shree

‘டாக்டர்’ பட புது ரிலீஸ் தேதி இதுதான்… அத்துடன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை…!

malar

‘மிஸ் யூ சுஷாந்த்’ – டுவிட்டரில் உருகும் ரசிகர்கள்

sathya suganthi

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan