“மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுவீங்களா?” – சிரித்து கொண்டே தோனி கூறிய அல்டிமேட் பதில்..!


ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில், சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது முறையாக ஐபிஎல் தொடரின் கோப்பையை வென்றுள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.

இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

மேலும் 2 புதிய அணிகளும் இணையவுள்ளன. இதனால் தோனி மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read  பந்தில் எச்சில் தடவிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸ் - எச்சரித்த நடுவர்கள்!

இதுகுறித்து போட்டி முடிந்த பின் பேசிய கேப்டன் தோனி, “அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் வர உள்ளன. எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பிசிசிஐ-ன் முடிவை பொறுத்துதான் எனது ஐபிஎல் எதிர்காலம் அமையும்” என கூறினார்.

அப்போது வர்ணனையாளர், “உண்மையை சொல்லுங்க… இது பிசிசிஐ பொறுத்தது கிடையாது. சிஎஸ்கே அணியும் நீங்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

Also Read  கண்ணீருடன் பார்சிலோனா அணிக்கு குட் பை சொன்ன மெஸ்ஸி.!

இதற்கு பதிலளித்த தோனி, “சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்து தான் இப்போது யோசிக்க வேண்டும். தோனி என்ற நபர் குறித்து அல்ல.

தற்போது அமையவுள்ள அணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பாக இருக்க வேண்டும். எங்கள் அனி 2008-ல் அமைந்த அணி. 2021 வரை அற்புதமாக இருந்து வருகிறது.

அதே போல் தான் மீண்டும் இருக்க வேண்டும். அதனால் என்னை விட 3 முக்கியமான வீரர்களை தக்க வைத்துக் கொள்வது சிறந்தது” என்று தெரிவித்தார்.

அப்போது சிஎஸ்கே அணியில் தோனி விட்டுச்சென்ற மரபு குறித்து பெருமை படுகிறீர்களா? என கேட்டபோது, சிரித்துக்கொண்டே தோனி, “சிஎஸ்கே விட்டு நான் இன்னும் செல்லவில்லை” என்று கூறினார்.

Also Read  கடைசி நேரத்தில் ஐதராபாத் அணியின் வெற்றியை பறித்துக்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

இதனால், சிஎஸ்கே அணியில் மீண்டும் விளையாடுவதை மறைமுகமாக தோனி உறுதிப்படுத்தியதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

1983 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மா காலமானார்…!

Lekha Shree

இந்திய அணி அதிரடி காட்டுமா?… அடிபணியுமா?…

Tamil Mint

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைக்கும் கொரோனா!

HariHara Suthan

ஐபிஎல் 2021: ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Lekha Shree

ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை வென்ற வீராங்கனையின் பகிர்வால் வாயடைத்து போன ரசிகர்கள்..!

Lekha Shree

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

மீண்டும் தொடங்கும் ஐபிஎல் திருவிழா… சென்னை-மும்பை அணிகள் மோதல்..!

suma lekha

சாதனை படைத்த சமான் – சர்ச்சையை கிளப்பிய டி காக்!

Jaya Thilagan

10 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!!

Tamil Mint

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி

Jaya Thilagan

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா இருக்கும் போது உனக்கென்ன கவலை? – விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கிய லக்ஷ்மன்!

Jaya Thilagan