”தோத்தாலும் ஜெயிச்சாலும் சண்ட செய்யுறோம்!” – விராட் கோலிக்காக வருந்தும் தோனி ரசிகர்கள்!


ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் நேற்று கொல்கத்தா அணியிடம் போராடி தோற்றது பெங்களூரு அணி. எப்போதும் பெங்களூரு அணி தோல்வியடைந்தால் மகிழும் மனங்கள் நேற்று ஏனோ கோலிக்காக வருந்தியது.

ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி ஆடிய கடைசி ஆட்டத்தில் தோல்வி என்பது எவ்வளவு வலிகளை தந்திருக்கும். தி கிங் இஸ் பேக் என்று நேற்று முந்தினம் நடந்த முதல் பிளே ஆஃப் போட்டியில் தோனியின் ஆட்டத்தை மெர்சிலிர்த்து பாராட்டி தோனியின் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக மாறினார் கோலி.

“பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் ஒரு விளையாட்டு வீரராக பெங்களூரு அணிக்கு 120 சதவிகித பங்களிப்பைச் செய்திருக்கிறேன். வேறு எந்த அணிக்காகவும் ஒருபோதும் ஆட மாட்டேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட விசுவாசமாக இருப்பதே முக்கியம். ஐபிஎல் போட்டிகளில் ஆடும் கடைசி நாள்வரை பெங்களூரு அணியுடனேயே இருப்பேன்” என போட்டி முடிந்ததும் கண்களில் கண்ணீரோடு கோலி பேசினார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த பெங்களூரு அணி, கொரோனா இடைவெளிக்குப் பிறகு போட்டி தொடங்கியதும், தொடர் தோல்விகளை சந்தித்தது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வென்றதில்லை ஆர்சிபி அணி.

Also Read  "இலங்கைக்கு எதிரான வெற்றி அபாரமானது!" - சச்சின் டெண்டுல்கர்

நேற்றைய போட்டியில் 20 ஓவர் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி.139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய கொல்கத்தா அணி, ரன்கள் எடுக்க சற்று தடுமாறியது தான். ஆனால் 12-ஆவது ஓவரில் சுனில் நரைன் மூன்று சிக்சர்களை விளாசி, கொல்கத்தா அணியை முன்னிலைக்குக் கொண்டுவந்தார்.

அந்த ஒரே ஓவரில் 22 ரன்கள் கொல்கத்தா அணிக்குக் கிடைத்தன.பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் அந்த அணியின் கிறிஸ்டியன் வீசிய 12-ஆவது ஓவர்தான். அதுவே கொல்கத்தாஅணியின் வெற்றியை சுலபமாக்கியது.

Also Read  டி-20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடி பரிசா.?: ஐசிசி அதிரடி அறிவிப்பு!!

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 12-ஆவது ஓவரில் 22 ரன்களைக் கொடுத்த கிறிஸ்டியன் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே 4 ரன்களை அடித்தார் ஷாகிப் அல் ஹசன். கடைசி 5 ஓவர்களில் அடிக்கப்பட்ட இரண்டாவது பவுண்டரி அது.

வெற்றிக்கு அது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அதன் பிறகு இலக்கை எட்டுவது கொல்கத்தா அணிக்கு எளிதாகிவிட்டது. கொல்கத்தா அணி நாளைய போட்டியில் டெல்லி அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி 15-ம் தேதி நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதும்.

Also Read  டி20 உலகக்கோப்பை: 'ஹிட்மேன்' ரோகித்தின் அதிரடியால் இந்தியா அபார வெற்றி..!

எப்போதும் ஐபிஎல் போட்டியில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறும் போது மீம்ஸ்களால் அவர்களை கிண்டல் செய்து தெறிக்கவிடும் நெட்டிசன்கள் இந்த முறை அமைதியாகிவிட்டனர். தோனி ரசிகர்களும் தான்.

எப்போதுமே விராட் கோலியை கிண்டல் செய்யும் பலரும் இந்த முறை அவருக்காக தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தோத்தாலும் ஜெயிச்சாலும் சண்டை செய்யுறோம் என்பது போல இந்த முறை தோற்றாலும் அடுத்த முறை இதே அணிக்காக விளையாடுவேன் என்று மிடுக்காக சொல்லி சென்றிருக்கிறார் கோலி. வி லவ் யூ விராட்…!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மெல்பர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை!

Tamil Mint

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

“இந்திய அணி பைனலுக்கு வரவேண்டும்.. ஆனால்” – சோயப் அக்தர் வைத்த ட்விஸ்ட்..!

Lekha Shree

ஐபிஎல் 2021: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரிட்சை!

Jaya Thilagan

கோல் மழை பொழிந்த யுஏஇ – இந்திய கால்பந்து அணி படுதோல்வி!

HariHara Suthan

78 ரன்களுக்குள் இந்தியாவை சுருட்டிய இங்கிலாந்து அணி.!

mani maran

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி!

Lekha Shree

ஐபிஎல் 2021: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா…!

Lekha Shree

கோலி 2.O – இந்தியாவுக்குக் காத்திருக்கும் அடுத்த அதிரடி பேட்ஸ்மேன்!

HariHara Suthan

கான்பூர் டெஸ்ட்: இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட்..!

Lekha Shree

பலம் வாய்ந்த பெங்களூரை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்!

Jaya Thilagan

டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? – தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா..!

Lekha Shree