விஜய், அஜித் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா?


கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் ஆரம்பமாகியுள்ளன.

அந்த வகையில் இன்று முதல் விஜய் நடிக்கும் பீஸ்ட், தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் மும்முரமாக தொடங்கியுள்ளன.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் படி கட்டுப்பாடுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது பாதுகாப்பாக இருக்க பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.

Also Read  ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்த பிறகு தான் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனால், இன்று ஆரம்பமாகியுள்ள விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

ஆனால் படத்தின் நாயகன் விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் சில தினங்களுக்கு முன் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. அப்படி அவர் தடுப்பூசி போட்டிருந்தால் அதை வெளியில் அறிவித்திருக்கலாமே அவரது ரசிகர்களும் எந்த தயக்கமுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வார்களே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Also Read  சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

அதேபோல அஜித் வலிமை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் சொல்கிறார்கள். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், யோகி பாபு, சூரி உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும், நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

Also Read  “பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில் நடந்ததை வெளியில் சொன்னால் உனக்கு தான் அசிங்கம்”... நடிகர் விமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு...!

ஆனால், அஜித், விஜய் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் அதை அவர்களது ரசிகர்கள் நலன் கருதி அத்தகவலை வெளியிடலாமே என பலர் முணுமுணுத்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…!

sathya suganthi

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் இணையும் பாலிவுட் கவர்ச்சி நடிகை..!

Lekha Shree

“இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்”- நடிகர் ஷாம்

Shanmugapriya

“திருமண நிர்பந்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது” – நடிகை சமீரா ரெட்டி

Lekha Shree

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை தாப்ஸி…!

Lekha Shree

வெற்றிமாறன் படத்திற்கு விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் இவ்வளவா?

Tamil Mint

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Tamil Mint

நடிகர் பிரபுவும் பாஜகவில் இணைகிறாரா?… அண்ணன் ராம்குமார் அளித்த அதிரடி விளக்கம்..!

Tamil Mint

சித்தி 2 சீரியல் வெண்பாவின் அசத்தல் போட்டோ ஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்..

HariHara Suthan

இயக்குனர் சங்கரின் இந்த படம் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது…

VIGNESH PERUMAL

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ‘பீஸ்ட்’ Second Look…!

Lekha Shree