தினமலர் VS பாஜக! செய்தியை நீக்கிய தினமலர்! ரூ.100 கோடி கேட்கும் பாஜக!


தினமலர் நாளிதழில் பாஜக குறித்து வெளியான செய்தி தான் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

தினமலர் நாளிதழ் மற்றும் இணையதள பக்கத்தில் நேற்று ஒரு செய்தி வெளியானது. அதில் கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம். தமிழக பாஜக தலைவர்களை வறுத்தெடுத்த சிடி ரவி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது.

அந்த கட்டுரையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்து தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார் என்றும், அப்போது தேர்தல் தோல்வி பற்றி கூட கேட்காமல் கமலாலயத்தில் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் நடந்து வருவதாகவும், ஒரு தலைவர் மீது மட்டும் 134 புகார்கள் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதோடு இனிமேல் கட்சிப்பணிகளுக்காக வெளியே செல்லும் போது ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் எடுக்கக் கூடாது என்றும், அப்படியே தங்கினாலும் பெண்களை அழைத்து வந்து கும்மாளம் அடிக்கக்கூடாது என்றும் சிடி ரவி எச்சரித்ததாக எழுதப்பட்டுள்ளது.

Also Read  பாஜகவில் இணைகிறாரா சுந்தர்.சி? - வெளியான முக்கிய தகவல்!

அதோடு கமலாலயத்தில் விசாகா கமிட்டி அமைக்கும் படி செய்துவிடாதீர்கள், எல்லா புகார்களுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது என அவர் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கட்டுரை வெளியானது பலரால் ஷேர் செய்யப்பட்டது. தமிழக பாஜக தலைவர்கள் அக்கட்சி பெண்களிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர் என பலரும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த செய்தி அவதூறாக உள்ளதாகவும், உண்மைத்தன்மை அற்றது எனவும் கூறி பாஜகவினர் சிலஎ எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதள மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் நோட்டீஸ் ஒன்றை தினமலருக்கு அனுப்பியுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

அதில் தமிழக பாஜக தலைவர்களை வருத்தெடுத்த சிடி ரவி என்ற துணை தலைப்பில் தினமலர் வெளியிட்டுருந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. தவறான தகவல்கள் மேலும் மாநில தலைவர் எல் முருகன், கேசவ விநாயகம் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமின்றி கட்சிக்கும் அவபெயர் ஏற்படுத்த கூடிய வகையில் வெளியிடபட்டுள்ளது.

அதோடு தினமலர் எடிட்டர் எனும் அடிப்படையில் கேஆர் ராமசுப்பு தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் கமலாலையத்தில் விஷாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் உருவாகும் என்ற தலைப்பில் பொய்யான செய்தி வெளியிட்டமைக்காக15 நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும்.

அத்துடன் நூறு கோடி ரூபாய் நஸ்டயீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல தமிழக பாஜகவின் கேடி ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினமலர் பத்திரிக்கையில் வெளியிட்டது போல எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும், கட்சியின் வளர்ச்சி குறித்து தான் விவாதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  தேமுதிக… தேய்பிறையா? விடிவெள்ளியா?

இந்த அறிக்கையை அடுத்து தினமலர் தங்களின் இணைய தளத்தில் இருந்து இந்த செய்தியை நீக்கியுள்ளது. ஆனாலும் செய்தித்தாளில் நேற்று வெளியான இந்த செய்தியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு பல தலைவர்கள் குறித்து ஆபாசமாக பதிவிட்டு வந்த கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டபோது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று பாஜகவினர் பேசிய நிலையில், இப்போது தினமலருக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“உலகின் 8வது அதிசயம் ஜெயலலிதா நினைவிடம்” -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Tamil Mint

சிக்னல் கிடைக்கவில்லை! – மரத்தையே வகுப்பறையாக மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

Shanmugapriya

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree

மஹாராஷ்டிரா: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி..!

Lekha Shree

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை… நேற்று ஒரே நாளில் பல கோடி வசூல்..!

Lekha Shree

PSBB பள்ளியில் நானும் மதுவந்தியும் டிரஸ்டிதான் – ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்

sathya suganthi

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya

“போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Lekha Shree

இந்திய அரசில் மிக சிறந்த அமைச்சகம் எது? – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Shanmugapriya

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan