தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் குறித்து வலியுறுத்தும் பிரபல இயக்குனர்…!


கொரோனா அச்சுறுத்தலால் திரைப்படத்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொரோனா 2ம் அலை காரணமாகதிரையரங்குகள் மூடப்பட்டது.

இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் உள்பட பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக மலையாளத்தில் ‘த்ரிஷ்யம் 2’, ‘ஜோஜி’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

Also Read  தமன்னாவின் முதல் தமிழ் வெப்சீரிஸ் இன்று ரிலீஸ்…!

இதனை கருத்தில் கொண்டு மலையாள சினிமா அம்மொழிகென பிரத்யேகமாக ஓடிடி இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது. இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை இயக்குனர் சேரன் வரவேற்றதோடு தமிழ் மொழிக்கும் தனி ஓடிடி தளம் அவசியம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில். “இது போன்ற முயற்சியை நமது தமிழ் திரைப்படத் துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும்.

சிறுமுதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவுகாலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

இந்த பதிவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோரது டுவிட்டர் பக்கங்களையும் டேக் செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குக் வித் கோமாளி சுனிதாவை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா – வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

தனுஷின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?

Lekha Shree

மலேசியாவில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையிடப்படவில்லை… ஏமாற்றத்தில் கோலிவுட் ரசிகர்கள்!

Tamil Mint

வைரலாகும் இசைப்புயலின் பள்ளிப்பருவ புகைப்படம்…!

Lekha Shree

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

Lekha Shree

துருவ் விக்ரமை இயக்கும் கர்ணன்! மாஸ் அப்டேட் இதோ…

HariHara Suthan

இன்று வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

கொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி? வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree