a

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடி தனிபெருமான்மையுடன் உள்ளது.

இதனால், 10 ஆண்டுகள் கழித்து திமுக தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. மே 7ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கப்போகும் மு.க. ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சி பிரமுகர்களும் திரையுலகினரும் தங்களின் வாழ்த்துக்ககளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் மு.க. ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “புதிய முதல்வராக பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக்கழக வெற்றியாளர்களுக்கும் அமையவிருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துக்கள்.. நல்லாட்சி நடக்கட்டும்.. நாட்டு மக்கள் நலம் பெறட்டும். உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

மற்றோரு பதிவில் “ஜெயலலிதா மறைவுக்குப்பின் 4 வருடங்கள் எளிமையான ஆட்சியை தந்த திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றி. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் நாம் தமிழர் கட்சிக்காகவும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது.. சீமானுக்கு வாழ்த்துக்கள்..” என பதிவிட்டுள்ளார்.

Also Read  பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்த்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் சுமார் 178 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

இவர் தான் ரியல் மாஸ்டர்…… வேஷ்டி சட்டையில் வாத்தி கம்மிங்……..

Devaraj

திமுகவின் மூத்த தலைவர் மறைந்தார்

Tamil Mint

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனே வழங்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்!

Tamil Mint

மன்மோகன் சிங் பிறந்தநாள்: மோடி மீது ராகுல் தாக்கு

Tamil Mint

மீம்ஸ்களை நிஜமாக்கிய ஆண்…! பெண் போல் வேடமிட்டு பஸ்ஸில் பயணம்…!

sathya suganthi

மின் வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

Tamil Mint

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன?

Lekha Shree

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை வரும் 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கிறார்

Tamil Mint

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint