a

‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும் விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தின் தலைப்பு அறிவிப்பில் நடிகர் சூரி காவல்துறை அதிகாரியாக உள்ள புகைப்படம் வெளியானது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் இயற்றிய ‘துணைவன்’ என்னும் புத்தகத்தை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்; கடுப்பான அஜித் வெளியிட்ட அறிக்கை!

இப்படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தற்பொழுது துருவ நட்சத்திரம், நவரசா, ஜோஷுவா அதிகாரம் ஒன்று மற்றும் நதிகளில் நீராடும் சூரியன் போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

Also Read  'ஜகமே தந்திரம்' நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

இவர் விடுதலை படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் இணயக்குனர் வெற்றிமாறன் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக இணையவுள்ளனர்.

இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு படத்தின் கதை என்னவாக இருக்கும் எனவும் யூகிக்க வைத்துள்ளது.

Also Read  தமிழில் பின்னணி பாடல் பாடும் பிரபல மலையாள நடிகர்…! வைரலாகும் புகைப்படம் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” – போனி கபூர் ஓபன் டாக்!

Shanmugapriya

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினின் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்…!

Lekha Shree

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint

தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

விஜய் டிவியின் பிரபல சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா! வைரலாகும் புதிய ப்ரோமோ..

HariHara Suthan

பாலிவுட்டில் கால் பதிக்கும் சாய்பல்லவி…!

sathya suganthi

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை நக்மாவுக்கு மீண்டும் கொரோனா!

Shanmugapriya

இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் சங்கர்..

Devaraj

‘மாஸ்டர்’ பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Lekha Shree

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint