a

போட்டோகிராபர் டூ இயக்குநர்! கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை!


பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 54.

கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடிகர் விவேக் உயிரிழந்ததால் ஏற்பட்ட சோகம் முழுவதுமாக மறைவதற்குள் மற்றொரு திரைப் பிரபலம் காலமானது, திரைத்துறையினரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தியா டுடே, கல்கி உள்ளிட்ட பத்திரிகைகளில் போட்டோகிராபராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த், கடந்த 1995ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தை ஒளிப்பதிவாளராக தொடங்கினார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருது பெற்று அசத்தினார். அதன் பின்னர் தமிழில், முதல் முதலாக அவர் ஒளிப்பதிவு செய்த படம் காதல் தேசம். பின்னர் இயக்குநர் ஷங்கரின் முதல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த், இதுவரை மொத்தம் 15 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இதுமட்டுமின்றி, 2005ம் ஆண்டு கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த், 2009ம் ஆண்டு அயன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை வசூல் ரீதியாக கொடுத்து பிரபல இயக்குநராக உருவெடுத்தார். தொடர்ந்து 2010ம் ஆண்டில் கோ, 2012ம் ஆண்டில் மாற்றான், 2015ம் ஆண்டில் அனேகன், 2017ம் ஆண்டில் கவண் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

Also Read  'பிக் பாஸ்' கணேஷ் வெங்கட்ராமிற்கு ஜோடியாகும் அஜித் பட நாயகி! யார் தெரியுமா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் சட்டவிரோதம்? தயாரிப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு!

Tamil Mint

‘சீயான் 60’ல் இணையும் விஜய் சேதுபதி? துருவ் விக்ரம் வெளியிட்ட வைரல் புகைப்படம் இதோ!

Lekha Shree

ராபின் சிங் காரை பறிமுதல் செய்த சென்னை போலீஸ்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Tamil Mint

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint

என்ன பவி இதெல்லாம்?… பட்டுப்புடவையை பாதியாக வெட்டி.. வைரலுக்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் முடிந்த போட்டோஷூட்!

Jaya Thilagan

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கைவண்ணத்தில் உருவான புதிய படத்தின் டிரைலர்…

VIGNESH PERUMAL

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை… ஆறுதல் கூறிய புகழ்!

HariHara Suthan

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan