“என்னத்த சொல்றது?” – ‘ஜெய் பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபனின் பதிவு..!


உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து மொழிகளில் அமேசான் தளத்தில் வெளியான இந்தப்படம் பழங்குடி மக்களின் உணர்வுகளையும் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவத்தையும் தத்ரூபமாக சித்தரித்து இருந்தது.

Also Read  ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்?

இந்த படத்தை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் முதல் அப்பால் பிரபலங்கள் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்தையும் பொழிந்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் ‘என்னத்த சொல்றது?’ என்ற தலைப்பில் ‘ஜெய் பீம்’ படம் குறித்த விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்… நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்!

ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்க துவங்கி கரைந்தே போனேன்.

Also Read  மாநாடு படத்தின் அப்டேட் குறித்து யுவன் ட்வீட்… ரசிகர்கள் குஷி..!

‘சந்துரு சார்’-இது பெயர் அல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை, நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்திக் கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன்.

அவரின் வாழ்க்கையை படமாக்க ஆசைப்பட்டு அது இன்று திரு த செ ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துரு சாரை பாராட்ட மெய்சிலிர்க்கிறேன்.

Also Read  'மன்மதன்' இஸ் பேக் - வைரலாகும் சிம்புவின் கூல் புகைப்படங்கள்!

சினிமா மூலம் சமூகத்திற்கு கோடான கோடி (not only one crore) நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா+ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியில் ரீமேக்காகும் ‘துருவங்கள் பதினாறு’…! ரகுமான் கதாபாத்திரத்தில் இந்த இளம் ஹீரோவா?

Lekha Shree

‘அரண்மனை 3’ படத்தின் சூப்பர் அப்டேட் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி-தமன்னா… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘மன்மதன்’ இஸ் பேக் – வைரலாகும் சிம்புவின் கூல் புகைப்படங்கள்!

Lekha Shree

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

Jaya Thilagan

தெரு நாய்களுக்காக 2 டன் உணவு பொருட்களை வழங்கிய வரலட்சுமி!

Shanmugapriya

நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்த நடிகர் சோனு சூட்..!

Lekha Shree

‘ஏ ராசா’ – மாமனிதன் படத்தின் 2வது பாடல் வெளியானது..!

Lekha Shree

வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

Lekha Shree

நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

Lekha Shree

ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree