மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக பேருந்துகள் கொள்முதல் தொடர்பாக தலைமை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்


அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில் 10 சதவீதம் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் ஏதுவான வசதிகளுடன், கொள்முதல் செய்யப்படும் என்று  தமிழக தலைமை செயலாளர் அறிக்கை விடுத்திருந்தார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2016 ம் ஆண்டு “கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதுதொடர்பான வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “கடந்த 2005 ஆண்டு முதல் இந்த வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும், தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாதது ஏன்?” என உயர்நீதிமன்றம்  கேள்வி எழுப்பி, தலைமை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் ஆகியோரை காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

Also Read  தமிழகம்: பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்…!

“அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் மேம்படுத்தும் வகையில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது, கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில் 10 சதவீத பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை நகரில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாழ்தள பேருந்துகளை இயக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Also Read  மத்திய குழு சென்னை வந்தது

மேலும், சென்னையில் தற்போது 10 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனவும் இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து நீதிபதிகள், “மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு நிதி பற்றாக்குறை என்றால் பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா? போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது கட்டாயம்தான். ஆனால், கருணைத் தொகை வழங்குவது கட்டாயமா? கருணைத் தொகை வழங்க கூறியது யார்”  என சரமாரி கேள்வி எழுப்பினர். சட்டங்கள் உள்ள போது அவற்றை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் தெரிவித்தனர்.

தலைமைச் செயலாளரின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததால் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவில்லை என மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூறப்படுவதால், தரமான சாலைகளை அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை என சுட்டிக்காட்டினர்.

Also Read  நாளை முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணங்கள் உயர்வு, மக்கள் அதிர்ச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு பயணம் செய்ய ஏதுவாக தற்போது இயக்கப்படும் 10 பேருந்துகள் போதுமானது அல்ல என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிவரும் என்றும் அந்த நிலை உருவாகாது என நம்புவதாகவும் தெரிவித்தனர். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுப் போக்குவரத்தில் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Tamil Mint

அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்! குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை!

Lekha Shree

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்

Shanmugapriya

வனவிலங்குகளை வதைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

Tamil Mint

தாயை பிரித்து 3 குழந்தைகளை அநாதையாக மாற்றிய கடன்தொல்லை

Devaraj

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

Lekha Shree

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Tamil Mint

வீடு வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி சென்னையில் 100 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

Tamil Mint

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம்

Tamil Mint