நீட் தேர்விலிருந்து விலக்கு – முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்..!


நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துகட்சி கூட்டம் நடைபெறுகிறது.

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Also Read  நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடக்கம்!

இந்த மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கண்டித்துள்ளன.

இது சம்பந்தமாக தமிழ்நாடு எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்ற போது அவர்களை அமைச்சர் சந்திக்க மறுத்துள்ளார்.

இதன் காரணமாக எம்பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். இச்சூழலில் அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணி அளவில் தலைமை செயலகத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், குழு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவது குறித்தும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்

முன்னதாக நேற்று ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ் நாட்டுக்கு நீட் தேவை. அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டு நீட்தேர்வு அவசியம் குறித்துப் பேசுவார்” என கூறியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

Ramya Tamil

சசிகலா விடுதலைக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! -மு.க.ஸ்டாலின்

Tamil Mint

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint

சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!

suma lekha

தமிழகத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எவை?

Tamil Mint

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj

திருமாவளவன் மற்றும் மனுஸ்மிரிதி விவகாரம், நடந்தது என்ன ?

Tamil Mint

திருச்சி: இறந்த தாயின் உடலை வைத்து 3 நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

“பெண்கள் 18 வயதில் வாக்களிக்கலாம்… திருமணம் கூடாதா?” – சமாஜ்வாடி எம்.பி சர்ச்சை பேச்சு!

Lekha Shree

“எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது!” – ஜெயக்குமார் காட்டம்..!

Lekha Shree