டிஸ்லைக் எண்ணிக்கையை இனி பார்வையாளர்கள் காண முடியாது..! யூடியூப் அதிரடி அறிவிப்பு..!


யூடியூப் கிரியேட்டர்களை மனஉளைச்சல் மற்றும் டார்கெட் அட்டாக் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்க தனது தளம் முழுவதும் உள்ள அனைத்து வீடியோக்களிலும் டிஸ்லைக் எண்ணிக்கையை பார்வையாளர்களுக்கு காட்டுவதை நிறுத்துவதாக யூடியூப் அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக திறமைகளை வெளிக்காட்டவும் அதே சமயம் அதற்கேற்ற வருவாயைத் தரும் தளமாக இருந்து வருகிறது யூடியூப். அத்துடன் எந்தவிதமான தேவையாக இருந்தாலும் யூடியூப் அதற்கான தீர்வாக இருக்கிறது.

இதில் ஏராளமானவர்கள் வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் வீடியோவை பார்க்கும் முன் அதற்கு கிடைத்திருக்கும் டிஸ்லைக்ஸ் கவுன்ட்டை பார்த்து விட்டு, வீடியோ நன்றாக இருக்காது போல என்று நினைத்து கொண்டு அதனை ஸ்கிப் செய்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் யூடியூப் கிரியேட்டர்களை மனஉளைச்சல் மற்றும் டார்கெட் அட்டாக் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்க அனைத்து வீடியோக்களிலும் டிஸ்லைக் எண்ணிக்கையை பொதுமக்களுக்கு அதாவது பார்வையாளர்களுக்கு காட்டுவதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read  மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்..!

இதன் மூலம் வீடியோவை பார்க்கும் ஒருவர் பிடித்திருந்தால் அதை லைக் செய்யலாம். வழக்கம் போல குறிப்பிட்ட வீடியோவிற்கு எத்தனை லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதையும் பார்க்கலாம். அதே சமயம் குறிப்பிட்ட வீடியோவை ஒரு வியூவர் டிஸ்லைக் செய்தால் நேரடியாக அது கிரியேட்டர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒருவர் ஒரு வீடியோவை டிஸ்லைக் செய்தபிறகு feedback shared with the creator என்று அவருக்கு ஸ்கிரீனில் தோன்றும். அதே சமயம் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட வீடியோவிற்கு எத்தனை டிஸ்லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது தெரியாது.

Also Read  விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பும் சீன ராக்கெட்…!

இது பற்றி தெரிவித்துள்ள YouTube, “பார்வையாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் இடையே மரியாதைக்குரிய தொடர்புகளை மேம்படுத்த விரும்புகிறோம். டிஸ்லைக் பட்டனை முழுவதுமாக நீக்காமல், அதே சமயம் கிரியேட்டர்களுக்கு மட்டுமே டிஸ்லைக்ஸ் கவுன்ட்ஸ் தெரியும்படி செய்து இருக்கிறோம். இது சில பொது அவமானங்களை தடுக்க உதவும்” என்று கூறி இருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

இன்ஸ்டாகிராம் நியூ அப்டேட்டால் ஷாக்கில் பயனியர்கள்.!

suma lekha

வாட்ஸ் ஆப் மீது சட்ட நடவடிக்கை – மத்திய எச்சரிக்கை

sathya suganthi

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

sathya suganthi

வாட்ஸ் அப்பின் 3 புதிய அப்டேட்ஸ்… என்னென்ன தெரியுமா?

Lekha Shree

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெட்ரோ நிலையங்களில் ‘இது’ அறிமுகம்…!

Lekha Shree

பதவி விலகும் பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி..என்ன காரணம்..!

suma lekha

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

ஸ்மார்ட்போனை விட அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் எலக்ட்ரிக் டூ வீலர்! ஐஐடி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Lekha Shree

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் பிரபல நிறுவனம்…!

Lekha Shree

கூகுள் போட்டோஸ் – ஜூன் 1 முதல் கட்டணம்…!

sathya suganthi