“வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – விஜயகாந்த்


வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்படுவதாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Also Read  விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி... புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி... புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக சட்டம் இயற்றப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், வன்னிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற காட்சிகள் விமர்சித்தனர்.

Also Read  அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: உச்சகட்டத்தை எட்டிய விசாரணை

இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்து, அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தினகரன் மகளுக்கு திருமண ஏற்பாடு

Tamil Mint

தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

suma lekha

முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Tamil Mint

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ஒரு கோடி குறைந்தது! – ஓபிஎஸின் சொத்து மதிப்பு 509% அதிகரிப்பு! – முழு விவரம்!

Shanmugapriya

ஸ்டாலின் மீது வழக்குப் பாய்ந்தது

Tamil Mint

மே 2 முழு ஊரடங்கு…! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

Devaraj

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Lekha Shree

கொரோனா சிகிச்சை பணியிலிருந்து மருத்துவர் வீரபாபு விலகல்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

Tamil Mint

திமுக வேட்பாளர்கள் பட்டியல்…!

Devaraj

“சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை செய்வேன்!” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

நேர்மையை ஆயுதமாக நாங்கள் கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள்: கமல்ஹாசன்

Tamil Mint