தி.மு.க மீதும் என் மீதும் வீண் பழிபோடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின்


இன்று (டிசம்பர் 31) தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக சிறப்புரையாற்றினார். 

அவ்வுரையில், “தி.மு.க மீதும் என்மீதும் வீண் பழிபோடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் என்ன சாதித்தார் என்று சென்னை மக்களிடம் கேளுங்கள்; தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க  கூட்டணிக் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றனர். தி.மு.க ஆட்சியில் குடிநீர் திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றி மக்களின் தாகத்தை தீர்த்தவன் ஸ்டாலின்.

Also Read  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற முயற்சி எடுத்தவன் நான். ராமநாதபுரம், வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டங்கள்; நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றினேன்.  ரூ.7,000 கோடி வரை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி கிடைக்க காரணமாக இருந்திருக்கிறேன். கலைஞரின் கனவுத் திட்டமான சமத்துவ புரத்தை 5 ஆண்டுகளில் 95 சமத்துவபுரத்தை உருவாக்கியுள்ளேன். முதல்வர் பழனிசாமியை   போல டெண்டர்களில் மட்டுமே நான் கவனம் செலுத்தவில்லை; மக்கள் திட்டங்களில் கவனம் செலுத்தினேன்.

அனைத்து துறைக்கும் நிதி ஒதுக்கி பல திட்டங்களை உருவாக்கிய அரசு கலைஞரின் அரசு. நான் விழித்துக் கொண்டு செயலாற்றுவது தூங்கிக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு தெரியாது. ஜெயலலிதா மரணத்துக்கு இன்னும் நீதி  கிடைக்கவில்லை” என சாடினார்.

Also Read  இன்று பிரதோஷம்: ஆன்லைன் மூலம் சிவ தரிசனம் செய்யலாம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

Lekha Shree

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு

Tamil Mint

கொரோனா தடுப்பு பரிசோதனையில் பங்கு பெற விருப்பமா?

Tamil Mint

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

Lekha Shree

தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Jaya Thilagan

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

sathya suganthi

மூன்று புதிய இணையதளங்களை தொடங்கியுள்ள தமிழ்நாடு மின்சார வாரியம்

Tamil Mint

இன்ஸ்டாகிராம் நட்பு – கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

Lekha Shree

பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடல் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை – பாமக தலைவர் ராமதாஸ் தமிழக ஆளுநருக்கு கண்டனம்!

Tamil Mint

முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு..!

Lekha Shree