43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றதில்லை: முதல்வர் பழனிசாமி


“2021 சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல் எனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்குகிறேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதை தொடர்ந்து சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கினார். 

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. அதில் 4 முறை முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 

2016 பேரவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி சுமார் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் எடப்பாடி தொகு அ.தி.மு.க., வின் கோட்டையாக பேசப்படுகிறது. 

அ.தி.மு.க பிரச்சார திட்டத்தை வெளியிடாத நிலையில், முன்கூட்டியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

Also Read  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம். நீர்மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது.

இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது. உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் உயர்கல்வி பயிலச் செல்வோர் விகிதம் 49 விழுக்காடு. அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சாலை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, தேவையான இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

Also Read  ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

எடப்பாடி தொகுதி அ.தி.மு.க., வின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றதில்லை. முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது” என பிரச்சாரத்தின் போது முதல்வர் குறிப்பிட்டார். 

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

Also Read  தமிழகம்: ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இன்னும் 4 மாதத்தில் தி.மு.க ஆட்சி அமையும்” என நம்பிக்கையோடு தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!

Lekha Shree

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

Tamil Mint

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Devaraj

தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு! ஒரே கட்டமாக தேர்தல்!

Bhuvaneshwari Velmurugan

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் – காவேரி மருத்துவமனை

Tamil Mint

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

குட்கா வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது – கோவில் நிர்வாகம்

Tamil Mint

நேர்மையை ஆயுதமாக நாங்கள் கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள்: கமல்ஹாசன்

Tamil Mint

செந்தில் பாலாஜிக்கு செக்: கொதித்தெழுந்த திமுக சீனியர்ஸ்.!

mani maran

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கலைமகள் வித்யா மந்திர் பள்ளி நிறுவனர் மீது புகார்!

sathya suganthi