a

10 ஆண்டுகள் கழித்து ஆட்சியமைக்கும் திமுக! மே 7-ம் தேதி பதவிபேற்பு!


மே 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராகிறார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடி தனிபெருமான்மையுடன் உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றனர்.

இந்நிலையில் வெற்றி சான்றிதழை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து வணங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி என்றும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.

Also Read  பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு குறைவு? - சுகாதார அதிகாரியின் தந்த விளக்கம்...!

10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Also Read  தமிழகத்தில் நிஜமாவே தாமரை மலர்ந்துருமோ..? பாஜகவின் முன்னிலை நிலவரம் இதோ..

இந்நிலையில் அவர் தமிழகத்தின் முதலமைச்சராக வரும் 7ஆம் தேதி பதவியேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினின் ரகசியங்களை வெளியிட போகிறாரா கு க செல்வம்?

Tamil Mint

அருணா சாய்ராமின் மகள் மரணம்

Tamil Mint

மது போதையில் ரகளை செய்யும் குடிமகன்களுக்கு எச்சரிக்கை….. பாதிக்கப்பட்ட மனைவி ஆவேசம்…

Devaraj

தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இன்று திடீரென டெல்லி செல்கின்றனார்.

Tamil Mint

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் – 124 முதல் 154 தொகுதிகளில் அதிமுக பெற்றி பெறும் – ஹரித்வார் சுவாமி ஆரூடம்

Devaraj

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!

sathya suganthi

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

Tamil Mint

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil