a

திமுகவின் முதல் ஊழல்! ஆட்டத்தை ஆரம்பித்த துரைமுருகன்!


திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, அவர்கள் நில மோசடி கும்பல், மணல் மாஃபியாக்கள் என அதிமுக பிரச்சாரங்களில் அனல் பறக்க பேசப்பட்டது.

10 ஆண்டுகள் கழித்து கோரப்பசியுடன் ஆட்சிக்கு வந்துள்ள திமுக என்னவெல்லாம் செய்வார்களோ என எதிர்கட்சிகள் பேசி வந்தன.

ஆனால் நாங்கள் அப்படி அல்ல என்பதை நிரூபிக்க திமுக கடுமையாக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது மணல் அள்ள திமுகவின் மூத்த தலைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவரது மகனுடன் சேர்ந்து குறிப்பிட்ட 3 பேருக்கு ரகசியமாக அனுமதி வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதன் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

2006- 2011 ஆட்சி காலத்தில் திமுக நில அபகரிப்பு மற்றும் ஆற்று மணல் கொள்ளையில் கொடிகட்டி பறந்தது.

அதற்காக பல வழக்குகளும் திமுக பிரமுகர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயத்தையே நம்பி இருக்கும் மாவட்டங்களில் ஆற்று மணலை மொத்தமாக அள்ளியதால் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயமே செய்யமுடியாத நிலை எல்லாம் அப்போது ஏற்பட்டது.

Also Read  நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

அதன் பிறகு அதிமுக ஆட்சி வந்ததும், மணல் மாஃபியாக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, செயற்கை மணலை கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி மலேசியாவில் இருந்து எம்-சாண்ட் இறக்குமதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல சமூக ஆர்வலர்களின் போராட்டங்களுக்கு பிறகு ஆற்றில் மணல் அள்ளும் நிலை மாறியது.

ஆனால் மீண்டும் மணல் குவாரிகளை முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.

நீர்வளத்துறை மூலமாக தான் மணல் விற்பனை நடைபெறும். அந்த வகையில் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் வீட்டிலேயே அவசர அவசரமாக 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நிறுவனங்கள் ரத்தினம், ராமசந்திரன், கரிகாலன் என்பவர்களுக்கு சொந்தமானது. அதற்கு ஆதாரமாக ஒரு ஆடியோவும் வெளியாகியுள்ளது.

Also Read  மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

கடந்த ஆட்சியில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய சேகர் ரெட்டி ஆதரவாளர்களான தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் மணல் ராமச்சந்திரன் நிறுவனங்களுக்கு தான் மணல் அள்ள அனுமதி கொடுத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சேகர் ரெட்டி விவகாரத்தால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து கரிகாலன் என்பவருக்கும் மணல் அள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆறுகளில் மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ள சில மாவட்டங்களில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது செந்தில் பாலாஜி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம் என பேசியது சர்ச்சையானது.

ஆட்சியில் அமர்வதற்கு முன்பே மணல் கொள்ளை பற்றி திமுக பேசுவதாக அதிமுக சாடியது. பிறகு திமுக தலைமை செந்தில் பாலாஜியை கண்டித்தது.

Also Read  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு

இந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது கடந்த ஆட்சியில் பெற்ற அவப்பெயரை மாற்றிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நுணுக்கமாக செயல்பட்டு வருகிறார்.

எதிர்கட்சியினர் கூட இவரது செயல்களை பாராட்டி வருகின்றனர். இதற்கு நடுவே துரைமுருகன் செய்திருக்கும் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகிகள் சிலர் சொல்லும் போது, மணல் அள்ள துரைமுருகன் போட்ட பிளான் எதுவும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது என்றும், மூத்த தலைவர் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு காசு பார்க்க துரைமுருகன் வேலை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

உடனடியாக இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு விவசாயிகளுக்கு பாசனத்துக்கு பாதிப்பு வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Devaraj

ரஜினி எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tamil Mint

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree

“தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்” – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Tamil Mint

சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை, கோவில்கள், பூங்காக்கள் திறப்பு

Tamil Mint

தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

Tamil Mint

11,12ம் வகுப்பு பாடத்தொகுப்பு -டிடிவி தினகரன் எதிர்ப்பு

Tamil Mint

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree

வாக்குச்சாவடியில் சிவகுமாராக மாறிய அஜித்…! “தல”யை டென்சனாக்கிய செல்பி பாய்…!

Devaraj