பெண்ணிடம் தகராறு செய்த திமுகவினர்… வெளுத்து வாங்கிய கிராமத்தினர்…!


பேக்கரி கடை ஒன்றில் தகராறு செய்த திமுகவினரை கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில், தஞ்சாவூரை சேர்ந்த ஆனந்தன் (48) என்பவர் பேக்கரி மற்றும் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

அக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை காரில், மன்னார்குடி நகர திமுக இளைஞரணி செயலர் சுதாகர், விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், மாணவர் அணி நகர துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 8 பேர் வந்துள்ளனர்.

அப்போது ஆனந்தன் பேக்கரியில் டீ குடித்துவிட்டு, அருகில் இருந்த பெட்டிக் கடையில் சிகரெட் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

Also Read  தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலை - மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!

அந்நேரம் அவர்கள் கடையில் இருந்த ரேவதி என்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து உள்ளனர்.

இதைப்பார்த்த ஆனந்தன் மகன் வசந்தன் மற்றும் ஊழியர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி பேக்கரியில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த தகராறில் ரேவதி, வசந்தன், பேக்கரி ஊழியர்கள் திருப்பதி, பாஸ்கர், வாடிக்கையாளர் கார்த்திகேயன் ஆகியோர் காயமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த கிராம மக்கள் திமுகவினரை மடக்கி பிடித்து அடித்து உதைத்துள்ளனர். அவர்களில் இருவர் காரில் தப்பி ஓடியுள்ளனர்.

Also Read  "இப்படி அவமானப்படுத்த வேண்டாம்" - சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

பின்னர் கிராம மக்கள் தாக்கியதில் சுதாகர், பாண்டவர், முருகேசன் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை போலீசார் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரேவதி அளித்த புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் 6 பேர் மீதும், திமுக நிர்வாகி பாண்டவர் அளித்த புகாரின்பேரில் சூரக்கோட்டையை சேர்ந்த 9 பேர் மீதும் தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  கொரோன பரவல் - தமிழகம் 3வது இடம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கலாய்க்கிறாரா விஜய்…! சைக்கிளில் வந்ததற்கான பின்னணி என்ன?

Devaraj

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு

Tamil Mint

தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Tamil Mint

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!

sathya suganthi

“செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பது உறுதி” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

தன் குடும்பத்தின் மீதான கடனை அடைத்த காந்தியவாதி: தமிழன் விஜய் போல் நிஜத்தில் செய்த நபர்.!

mani maran

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

Lekha Shree

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் முதல்வர்

Tamil Mint

உப்பலத்தில் மிதந்த ஆதரவற்ற மூதாட்டி உடல்….

VIGNESH PERUMAL

சென்னையில் விற்கப்படும் தரமற்ற தண்ணீர்: திடுக் தகவல்கள்

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல்..!

Lekha Shree