ஜனவரி 10 வரை கிராமசபை கூட்டங்கள் நடக்கும்: மு.க. ஸ்டாலின்


மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும். அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல திமுக என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

“200 தொகுதிகளுக்குத் துளியும் குறையாமல் வெற்றி என்பது முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும் அமைச்சர்கள் ஒருவரும் வெற்றிபெறக்கூடாது என்பது தி.மு.க., வின் இரண்டாவது இலக்கு.

இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத் துறையினர் கொடுத்த அறிக்கைகளும், மக்கள் காட்டும் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அரசியல் விபத்தில் முதல்வரான எடப்பாடி பழனி சாமிக்கு ஒரே நாளில் உறக்கம்  நிரந்தரமாகக் கலைந்து விட்டது.  

கிராமசபை என்ற பெயரைப் பயன்படுத்தி  அரசியல் கட்சிகளும் தனியாரும் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என டிசம்பர் 24-ம் தேதியன்று பொழுது சாய்ந்தபிறகு அறிக்கை வெளியாகிறது. இரண்டே நாட்களில் இத்தனை பயம் வந்து இதயத்தில் கூடு கட்டிக் கொண்டதா? 

Also Read  இயக்குனர் வேலு பிரபாகரன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

கிராம சபைக் கூட்டம் என்பது இனி, மக்கள் சபைக் கூட்டம் என்ற  பெயருடன் தொடர்ந்து நடைபெறும் என்பதை அறிவித்திருக்கிறேன். ஜனவரி 10 வரை, 16,500 ஊராட்சிக் கூட்டங்களை நடத்தி  நிறைவேற்றும்வரை இது நிச்சயமாகத் தொடரும்.  அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி தி.மு.க.,வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. 

பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளால் தி.மு.க.,வை சீண்டிப் பார்க்க  வேண்டாம். தி.மு.க.,வின் கூட்டங்களுக்குத் தடை போட நினைத்தால், அதற்கான பதிலடியை ஜனநாயகமுறையில் நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.க.,வின் மக்கள் கிராமசபைக்  கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி” என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பா.ஜ.க.வால் தான் அதிமுக தோற்றது…! சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!

sathya suganthi

உள்குத்து நிர்வாகிகள்… டோஸ் விட்ட ராமதாஸ்…

Devaraj

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

‘நிழல் இல்லா நாள்’ – ஓர் அறிவியல் நிகழ்வு!

Lekha Shree

ஊரடங்கில் மேலும் தளர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

sathya suganthi

சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை! – கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree

தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Lekha Shree

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு – தேமுதிக கேட்கும் 23 இடங்களுக்கு தலையசைக்குமா அதிமுக…!

Jaya Thilagan

அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது: மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Tamil Mint