“அதிமுக ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்”: மு.க. ஸ்டாலின்


நேற்று ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில், கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., சார்பில், தேர்தல் பிரச்சார கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்தது. 

அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”தமிழக அரசியல் களத்தில், களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவான, இந்த ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்” என ஆவேசமாக பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த, ஒரு வாரமாக, டில்லி கொந்தளிப்பாக இருக்கிறது. விவசாயிகள் இரவும், பகலுமாக போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களால், வேளாண்மை சிதைந்து போகிறது” என விவசாயிகள் போராட்டம் பற்றிய தன் கருத்தை முன்மொழிந்தார். 

தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திய  பொழுது புதிய விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி ஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தினார். 

Also Read  மதுபாட்டிலில் கிடந்த பாம்பு; குடித்த மதுப்பிரியர் மயக்கம்

அப்பொழுது “ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது; ஸ்டாலின் என்ன விவசாயியா?” என முதல்வர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளிக்கும் விதமாக “நான் விவசாயியும் அல்ல; விவசாயம் செய்ததாகச் சொல்லவும் இல்லை.ஆனால், விவசாயம் செய்து வருவதாக சொல்லும் முதல்வருக்கு தான், விவசாயம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. நான் சொன்னதை தான், பஞ்சாப், உ.பி., – ம.பி., ராஜஸ்தான் விவசாயிகள் சொல்கின்றனர்” என ஸ்டாலின் கூறினார் .

Also Read  விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

மேலும் உரையாற்றிய அவர் “இது பற்றி, முதல்வர் என்ன பதில் சொல்வார்; பஞ்சாப் விவசாயிகளுக்கு விவசாயம் தெரியவில்லை என்பாரா? எல்லா நிலத்திலும் பயிரும் இருக்கும்; களையும் இருக்கும். ஒரு விவசாயி, அந்த களையை, முதலில் எடுத்துக் களைவார். பின், பயிர் சரியாக வளரும். அதேபோல், தமிழக அரசியல் களத்தில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவான, இந்த ஆட்சியாளர் என்ற களையை, தேர்தலில் களையெடுக்க வேண்டும்” என காட்டமாக பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

sathya suganthi

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது – கோவில் நிர்வாகம்

Tamil Mint

விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்?

Tamil Mint

அதிமுக தலைமை அறிக்கை… அச்சமா? அறிவுரையா?

Devaraj

பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி – மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

Lekha Shree

தமிழகத்துக்குள் நுழைந்த டெல்டா+ : இதுவரை 3 பேர் பாதிப்பு

sathya suganthi

வெறும் 261 வாக்குகள் தான் வித்தியாசம்.. கரூரில் டஃப் கொடுக்கும் செந்தில்பாலாஜி..

Ramya Tamil

எச்சில் துப்பி தயாரிக்கப்படும் ரஸ்க்… வைரலான வீடியோ… பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று – மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

Lekha Shree

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்

Tamil Mint

அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்…!

Devaraj

தமிழன் டிவி நிருபர் மோசஸ் கொலை வழக்கு! மூவர் கைது! ஒருவர் தலைமறைவு

Tamil Mint