மிஷன் 200 என்பது தான் தி.மு.க., வின் இலக்கு – மு.க. ஸ்டாலின்


தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

அப்போது பேசிய அவர், “பொதுக்குழுவாக இருந்தாலும், செயற்குழுவாக இருந்தாலும், மாவட்ட செயலாளர் கூட்டமாக இருந்தாலும் ஒரு கருத்தை நான் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறேன். நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் அந்த வெற்றியை சாதாரணமாக அடைந்துவிட முடியாது. அதற்கான உழைப்பை, அதற்கான செயலை, அதற்கான பிரசாரத்தை நாம் எந்த அளவுக்கு முடுக்கிவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வெற்றியை முழுமையாக அடைவோம்.

Also Read  ”அண்ணாமலை நீயெல்லாம் கர்நாடக சிங்கமா? நீ ஒரு புரோக்கர்!” கிழித்தெடுத்த மதன் ரவிச்சந்திரன்!

பணமா?, மக்கள் மனமா? என்றால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனத்துக்கு உள்ளது. மக்கள் மனதை நீங்கள் வென்றாக வேண்டும். ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பிரசார பயணத்தை தொடங்க இருக்கிறேன்.

அ.தி.மு.க.வை நிராகரிக்க வைப்போம். தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்போம். நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல் தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். ‘மிஷன்-200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும். இன்று முதல் ஒவ்வொரு 24 மணி நேரமும் உழைத்தால்தான் 200-க்கும் மேல் என்பது சாத்தியம்” என உறுதியோடு பேசினார்.

Also Read  கடலூர்: திடீரென வெடித்து சிதறிய வீட்டு உபயோகப் பொருட்கள்… காரணம் இதுதான்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தலுக்கு பிறகு முழு லாக்டவுனா… ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ…!

Devaraj

கொவிட்-19: அதிக பரிசோதனைகள் மூலம் ஆபத்திலிருந்து மீண்டு வரும் தமிழகம்

Tamil Mint

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

விதிகளை மீறினாரா தமிழக அமைச்சர்?

Tamil Mint

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

“ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யும் புதிய சட்டம்!” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

Lekha Shree

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..! எந்தெந்த மண்டலங்களில் தெரியுமா?

Lekha Shree

மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா..!

Lekha Shree

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் – சுதந்திர தினத்தன்று அறிவிப்பு?

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தேர்தல் பிரச்சாரம் காரணமா?

Devaraj

மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

sathya suganthi

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு – சென்னை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree