சமூக ஊடகத்தில் மாணவியின் பிரச்சினையைக் கண்டு நடவடிக்கை எடுத்த திமுக எம்.பி. கனிமொழி..!


கடலூர் மாவட்டம் , முதனை கிராமத்தைச் சேர்ந்த தீர்ஷணா என்ற மாணவி, (பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்) தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுக்கால சட்டப் படிப்பிற்காக விண்ணப்பித்து மெரிட் லிஸ்ட்-ல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கலந்தாய்வு முடிந்தபின்பு அவருக்குச் சட்டக் கல்லூரியிலிருந்து சேரும்படி மின்னஞ்சல் வந்துள்ளது.

சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தாலும் அதற்கான உரிய Allotment Letter என்று சொல்லப்படக்கூடிய கடிதம் வந்து சேரவில்லை. இதனால், சட்ட பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, “உங்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது நீங்கள் எடுக்கவில்லை. அதனால் சேர்க்கையை ரத்து செய்து விட்டோம்” என்று கூறியுள்ளனர்.

Also Read  கோவை அருகே ரயிலில் மோதி காயம் அடைந்த யானை பலி!

மேலும், பலமுறை சட்ட பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டார், ஆனால் எந்த பயனுமில்லை.

இதனால் பதற்றம் அடைந்த அந்த மாணவி, உறவினர்களின் வழிகாட்டுதலின்படி. தனது ட்விட்டர் பக்கத்தில், தான் படிக்க உதவி செய்யுமாறு தமிழக அமைச்சர்கள் மற்றும் மக்களைவை உறுப்பினருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read  அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இந்த பதிவை கண்டா திமுக எம்.பி. கனிமொழி முழு விவரம் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர், உடனடியாக தமிழக சட்ட அமைச்சரையும், பல்கலைக்கழகத்தையும் தொடர்பு கொண்டு, அந்த மாணவிக்குத் தேவையான உரியக் கடிதத்தையும், கல்லூரியில் இடத்தையும் உறுதி செய்து கொடுத்துள்ளார்.

தருமபுரி சட்டக் கல்லூரியில் படிப்பதற்கு Allotment Letter கிடைத்ததை அடுத்து அந்த மாணவி திமுக எம்.பி. கனிமொழிக்கு மனமார்ந்த நன்றியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சமீபத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் பார்த்தேன். மிக முக்கியமான பிரச்சனையை எடுத்துச் சிறப்பாகச் சொல்லியிருந்தார்கள். பல்வேறு இடங்களில் கல்வி தான் நமக்குத் தீர்வு என்று சொல்லப்பட்டு இருக்கிறது” என கூறியுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாழ்த்து சொன்ன கனிமொழி எம்.பி.,! நன்றி சொன்ன மம்தா!

Lekha Shree

ஜனவரியிலேயே சுடும் சூரியன்… மே மாதம் எப்படி?

Tamil Mint

தி.மு.க மீதும் என் மீதும் வீண் பழிபோடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின்

Tamil Mint

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது

Tamil Mint

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது – தமிழக தேர்தல் ஆணையம்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

Lekha Shree

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

Tamil Mint

மெரினா கடற்கரையை விரைவில் திறக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

நீட் தேர்வு – ஏ.கே. ராஜன் குழு கூறுவது என்ன?

Lekha Shree

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

suma lekha