முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் கைது…!


முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் பனிக்குப்பத்தில் உள்ள கடலூர் திமுக எம்.பி. ரமேஷ்-க்கு முந்திரி தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார்.

Also Read  கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கோவிந்தராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக ரமேஷ் எம்.பி., அவரது உதவியாளர் நடராஜ், தொழிலாளிகள் சுந்தர், வினோத், கந்தவேல், அல்லாபிச்சை ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் 302, 201,149, 120b, 147, 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Also Read  தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

அதையடுத்து கடந்த அக்டோபர் 8ஆம் தேதி நடராஜ், கந்தவேல், சுந்தர், அல்லாபிச்சை, வினோத் ஆகிய 5 பேரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக எம்.பி. ரமேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பண்ருட்டி நீதிமன்றத்தில் முதலாவது மாஜிஸ்திரேட் கற்பகவல்லி முன்பு சரணடைந்தார் ரமேஷ் எம்.பி.

Also Read  சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் பண்ருட்டி நீதிமன்றம் திமுக எம்.பி. ரமேஷை அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவிட்டது.

நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ரமேஷ் இன்று நீதிமன்றத்தில் அராஜரானார். அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டனர்.

ஆனால், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திமுக எம்.பி. ரமேஷை விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பலன் தரும் பனை, புயலை தாங்கும் பலம்

Tamil Mint

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது!

Tamil Mint

அவதூறு பேச்சு: நேரில் ஆஜராவாரா ஆ.ராசா?

Lekha Shree

பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தது எப்படி? – தேர்தல் ஆணையம் தந்த விளக்கம் என்ன?

Shanmugapriya

அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்…!

Devaraj

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran

‘நல்லாட்சிக்காக அதிக விருதுகளை பெற்றுள்ள ஒரே அரசு தமிழக அரசு’- அமித்ஷா

Shanmugapriya

PSBB பள்ளியின் டிரஸ்டி ஒய்.ஜி.மகேந்திராவின் தலைசுற்ற வைக்கும் குடும்ப பின்னணி!

sathya suganthi

பள்ளிகள் திறப்பை பற்றி முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்

Tamil Mint

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj