a

200+ இடங்களை திமுக பிடிக்காததற்கு காரணம் என்ன?


200 இடங்களுக்கு மேல் திமுக‌ வெற்றி பெறும் என்று இருந்த நிலையில் தற்போது தனி மெஜாரிட்டி கிடைக்க திமுக போராடும் நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து களப்பணியில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து திமுக தலைமையிடம் கொடுத்தது ஐ-பேக் குழு.

ஆனால், அந்த ரிப்போர்ட்டை ஏற்றுக்கொள்ளாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போதே திமுக தலைமையிடம் எதிர்பார்த்த தொகுதி கிடைக்கவில்லை என்றால் எங்களை காரணம் காட்டக்கூடாது என்று எச்சரித்திருந்தது ஐ-பேக் டீம்.

அதேபோல், இந்தத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என்றும் எச்சரித்தது ஐ-பேக் டீம். உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்ற மனநிலை இளைஞர்கள் மத்தியிலும், முதல்முறை வாக்காளர்கள் மத்தியிலும் ஏற்படும் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே வேட்பாளர்கள் தேர்வில் ஐ.பெரியசாமி மகன் ஐ.பி.செந்தில்குமார், டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா, பொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ் உள்ளிட்ட வாரிசுகளுக்கே அதிக முன்னுரிமை வழங்கியிருக்கிறது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாய்ப்பு வழங்கினால் இளைஞர்கள் வாக்குகளும், முதல் முறை வாக்காளர்களின் வாக்குகளும் திமுக பக்கம் வராமல் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று முன்பே எச்சரித்திருந்தது ஐ-பேக்.

திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து திமுக சீனியர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அதே சமயத்தில், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தலைமையில், குடும்ப உறவான பிரவின், பிரபல லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டின் என்பவரின் உறவினரான அர்ஜுன், அண்ணாநகர் கார்த்தி, கோவை கார்த்தி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் முதலில் புகுந்து பல குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read  தமிழக தேர்தல் 2021 முடிவுகள்: முன்னிலை நிலவரம்…!


இது திமுக சீனியர்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின் போது சசிகலாவை தகாத முறையில் விமர்சித்தது பெண்கள் மத்தியில் திமுகவிற்கு எதிரான ஒரு மனநிலையை கொண்டுவருவதற்கு காரணமாக அமைந்தது.

அதேபோல மோடி போன்ற பிரபல தலைவர்களை ஒருமையில் விமர்சிப்பதும், மறைந்த பாஜக தலைவர்களான அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மோடியின் சித்திரவதையினால் தான் உயிரிழந்தனர் என்று பேசியதும் அதற்கு இருவரின் மகள்களும் பிரதமர் மோடி எங்கள் குடும்பத்தின் மீது அளவுகடந்த மரியாதை வைத்துள்ளார் இப்படி உங்கள் பிரச்சாரத்திற்காக எங்கள் பெற்றோர் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று பதிலடி கொடுத்தனர்.

இப்படி கைதட்டு வாங்குவதற்காக மக்கள் மத்தியில் தவறான தகவல்களை சொல்லி பிரச்சாரம் செய்துவந்ததும் மக்கள் மத்தியில் திமுக மேல் நம்பிக்கை வராமல் இருந்த காரணங்களாக அமைந்ததாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read  முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

மேலும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்ணியமற்ற வார்த்தைகளால் விமர்சித்தது மேற்கு மண்டலத்தில் திமுகவிற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் எடுபடாமல் போனதற்கான முக்கிய காரணமாக ஆ.ராசாவின் பேச்சு அமைந்தது.

திமுகவில் இரட்டை தலைமை போல மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டு வந்ததை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் யார் கட்சியின் தலைவர் என்ற குழப்பம் மக்கள் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் ஏற்பட்டது என்றும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு அணியின் செயலாளராக மட்டுமே இருந்து கொண்டு திமுக அலுவலகங்களிலும், திமுக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இணையாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் இடம் பெற்றிருப்பதை பொது வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்றும் ஆட்சிக்கு வரும்முன்னரே உதயநிதியை முன்னிலைப் படுத்தினால் ஆட்சிக்கு வந்த பின் அவர்தான் அறிவிக்கப்படாத முதல்வராக வலம் வருவார் என்ற அதிருப்தி பொதுமக்கள் மத்தியில் பெரிதாக எழுந்தது என்றும் கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார் போல் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி திமு.க-வின் இளவரசர், கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு முக்கியப் பதவிக்கு வந்துவிட்டார் என்று பரப்புரையில் ஈடுபட அது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Also Read  கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!

சீனியர்கள் கருத்துக்கள் கூறினால் “நீ யார் எனக்கு கருத்து கூற? என்ற மனப்பான்மையோடு அதற்கு நேர் எதிராக செயல்படுவது தான் மருமகன் சபரீசனின் வழக்கம் என்று கூறப்படும் நிலையில் அதனையும் மீறி சீனியர்கள் பேசும் பட்சத்தில் அவர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது கட்சி சீனியர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஒரு சோர்வையும் உண்டாக்கியதாக கருதப்படுகிறது.

தன்னை விட கட்சியில் யாரும் வளர்ந்து விட கூடாது என்பதில் குறியாக இருக்கும் சபரீசன் வெற்றி வாய்ப்புள்ள பல மாவட்ட செயலாளருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என அக்கட்சி நிர்வாகிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், திமுக எளிதாக வெற்றி பெறக்கூடிய பல தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய நிலையில், அதிலும் குறிப்பாக வேளச்சேரி திமுக எளிதாக வெற்றி பெறக்கூடிய தொகுதி அதையும், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட பல தவறான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியதில் மாவட்ட செயலாளர்களை விட குடும்ப உறுப்பினர்களின் தலையீடே அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதில் அதிருப்தி ஏற்பட்ட திமுக எம்எல்ஏ-வாக இருந்த டாக்டர்.சரவணன் பாஜகவுக்கு தாவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சேர்ந்து தான் இந்த தேர்தலில் திமுக எதிர்பார்த்த தொகுதி கிடைக்காமல் போனதற்கான காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் மழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு… ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா…!

Tamil Mint

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

Tamil Mint

மங்களக்கரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் – பீலா ராஜேஷ் அதிரடி உத்தரவு

Devaraj

இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

Devaraj

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!

Tamil Mint

தமிழகத்தில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

Tamil Mint

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு

Tamil Mint

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி

Tamil Mint